Breaking News

அடிலெய்டில் சந்தேக மரணம் தொடர்பான வழக்கில் மூன்றாவது நபர் கைது : விசாரணையை தீவிரப்படுத்தும் காவல்துறை

Third person arrested in Adelaide suspect death case. Police intensify investigation

தெற்கு ஆஸ்திரேலியாவின் Seaford பகுதியைச் சேர்ந்த 33வயதான Robert Atkins, கடந்த மாதம் சித்ரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட கிடந்தார்.

இது தொடர்பாக போலீசார் நடத்தி வரும் விசாரணையில் ஏற்கனவே 2 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மூன்றாவது நபரான 43 வயது மதிக்கத்தக்க Christie Downs கைது செய்யப்பட்டுள்ளார் சட்டத்திற்கு புறம்பாக தடுப்புக் காவலில் வைத்து கொடூரமாக Robert Atkins-ஐ சித்ரவதை செய்து கொலை செய்யப்பட்டிருப்பதாக காவல்துறை அறிக்கை தெரிவிக்கிறது.

Third person arrested in Adelaide suspect death case. Police intensify investigation.Seaford மற்றும் Aldinga பகுதிகளில் இந்த சம்பவத்தில் தொடர்புடைய 2 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது மூன்றாவது நபரை முக்கிய குற்ற வழக்குகளை விசாரிக்கும் புலனாய்வு பிரிவு போலீசார் சுற்றி வளைத்து கைது செய்துள்ளனர். Robert Atkins-ஐ சித்திரவதை செய்ததை வீடியோ பதிவு செய்து பேஸ்புக்கில் பதிவேற்றம் செய்யப்பட்டிருப்பதும் தெரியவந்துள்ளது. அந்த வீடியோக்களை காவல்துறையினர் நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளனர்.

Robert Atkins காணாமல் போனதாக அவரது தாய் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் நடத்திய விசாரணையில் அவர் கொடூரமாக தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இந்நிலையில் கைது செய்யப்பட்ட 3 பேரும் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து முக்கிய வழக்குகளை விசாரிக்கும் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

தெற்கு ஊரக பகுதியை சேர்ந்த போதைப்பொருள் பழக்கத்தில் இருக்கும் கும்பலுக்கும் இந்த கொலை வழக்கில் கைதாகியுள்ள மூவருக்கும் தொடர்பு இருப்பதாகவும் அதன் அடிப்படையிலேயே இவர்கள் இதுபோன்ற சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என்றும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

Robert Atkins கொலை செய்யப்பட்டதாக கூறப்படும் இடத்தில் இருந்து உடல் கிடைக்காத நிலையில, அவரது உடலை தேடும் பணியில் போலீசார் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

Link Source: https://ab.co/2WvtoFQ