Breaking News

மேற்கு ஆஸ்திரேலியாவில் மூன்றாவது டெல்டா வைரஸ் பாதிப்பு பதிவானது : பெர்த் – பீல் பகுதிகளில் ஊரடங்கு அமலுக்கு வந்தது

Mindarie microbrewery- ல் முதல் தொற்று பதிவான நிலையில் அது வீரியம் மிக்க டெல்டா வைரஸ் என்று கண்டறியப்பட்டது. இதனைத் தொடர்ந்து இரண்டு பாதிப்புகள் அடுத்தடுத்து பதிவான நிலையில் நான்கு நாட்கள் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. ஊரடங்கின் முதல் நாளில் பெர்த் – பீல் பகுதிகள் வெறிச்சோடி காணப்பட்டன. மக்கள் வீடுகளை விட்டு வெளியே வரக்கூடாது என்றும் அத்தியாவசியத் தேவைகளுக்காக அனுமதி பெற்று வர வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

Mindarie -ல் Indian Ocean Brewing நிறுவனத்தில் பணியாற்றும் 30 வயது ஆண் ஒருவருக்கு சமீபத்தில் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இவருக்கும் 51 வயது பெண்மணிக்கு மிக அதிக பாதிப்பை ஏற்படுத்தும் டெல்டா வகை வைரஸ் பாதிக்கப்பட்டு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

Third Delta virus outbreak in Western Australia Curfew imposed in Perth-Peel,,.பாதிப்புகள் அனைத்தும் தொடர் தொற்றுப் பரவல் மூலமாக விரைவாக உறுதியானது என்று மேற்கு ஆஸ்திரேலிய ப்ரீமியர் Mark McGowan கூறியுள்ளார். கிட்ட நிறுவனங்களில் பணியாற்றும் நபர்கள் மற்றும் தொற்று பரவல் தொடர்பில் உள்ளவர்கள் உடனடியாக தங்களைத் தனிமைப் படுத்திக் கொண்டு பரிசோதனைக்கு உட்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும் தொற்று பரவல் அதிகரிப்பு குறித்து ப்ரீமியர் தன்னுடைய பதட்டத்தையும் வெளிப்படுத்தினார்.

Third Delta virus outbreak in Western Australia Curfew imposed in Perth-Peel,.தடுப்பூசி செலுத்தும் பணிகள் முழுமையாக முடிவடையும் வரை ஊரடங்கு ஒன்றே தற்போதைக்கு நம் கையில் உள்ள ஆயுதம் என்றும், நாளொன்றுக்கு 20 முதல் 40 பேர் வரை தொடர்பில் இருப்பதால் பாதிப்பு அதிகரிக்கும் அச்சம் இருப்பதாகவும் ப்ரீமியர் Mark McGowan தெரிவித்துள்ளார். பெர்த்-ன் வடக்கு ஊரக பகுதிகளில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை மேலும் தீவிரப்படுத்துவது தொற்றுப்பரவலை கட்டுக்குள் கொண்டு வரும் என்றும், மக்கள் பெருமளவு கூட்டமாக ஆற்றைக் கடப்பது அதிகரித்து வருவது கவலையை அளிப்பதாகவும் Mark McGowan கூறியுள்ளார்.

அவசர மற்றும் அத்தியாவசிய மருத்துவ பணிகளுக்காக செல்வோருக்கு முன் அனுமதியின் அடிப்படையில் வெளியில் சென்றுவர தளர்வு வழங்கப்பட்டுள்ளது. இதேபோன்று கொரோனா ஊரடங்கு காலத்தில் பாதிக்கப்பட்ட நிறுவனங்களுக்கு இழப்பீடு வழங்கப்படும் என்றும் மேற்கு ஆஸ்திரேலிய வர்த்தக கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

Link Source: https://ab.co/3qwTiDF