Breaking News

ஆப்ரிக்க வெட்டுக்கிளிகளின் படையெடுப்பை குறைந்த அளவிலான மழை தடுத்து நிறுத்தும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

There is hope that low rainfall will prevent the invasion of African locusts

வனப்பகுதியும், விவசாய நிலப்பகுதியும் சந்திக்கும் இடத்தில் லட்சக்கணக்கான பாலைவன வெட்டுக்கிளிகள் கூட்டம், கூட்டமாக படையெடுக்கத் தொடங்கி உள்ளன.

பராக்கா மலைத்தொடர் பகுதியில் ஸ்பிரே துப்பாக்கிகள் பொருத்தப்பட்ட வாகனங்களின் அணிவகுத்து சென்ற வீரர்கள் வெட்டுக்கிளி படையெடுப்பை கண்டு அதிர்ந்து நின்றனர். கிராம மக்களை அச்சம் மற்றும் குழப்பத்தில் இருந்து நிச்சயம் வெளிக்கொண்டு வருவோம் என பாதுகாப்பு வீரர்கள் தெரிவித்துள்ளனர்.

There is hope that low rainfall will prevent the invasion of African locusts 2இரண்டாவது ஆண்டாக கிழக்கு ஆப்ரிக்கா பகுதியில் தொடரும் வெட்டுக்கிளி படையெடுப்பை மிகத்தீவிர அச்சுறுத்தலாக இருப்பதாகவும், பாதுகாப்பு வீரர்களுடன் இணைந்து இந்த சவாலை சந்திக்க உள்ளதாக விவசாயத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர். மேலும், சோமாலிய நிலப்பகுதிகளில் தொடர்ந்து வெட்டுக்கிளிகள் இனப்பெருக்கம் செய்வதாகவும் கூறப்படுகிறது.

கென்யாவில் வேளாண் பணிகள் தொடங்கி உள்ள நிலையில், தற்போது பெய்யத் தொடங்கியுள்ள குறைவான மழை நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது. வெட்டுக்களிகளுக்கு எதிரான போரில் வென்று விவசாயத்தை காக்க வேண்டும் அச்சம் விவசாயிகளிடம் காணப்படுகிறது.

There is hope that low rainfall will prevent the invasion of African locusts 1கோதுமை, உருளைக்கிழங்கு அதிகம் விளைவிக்கப்படும் கென்யா, எத்தியோப்பியா பகுதிகளில் தொடர்ந்து தீவிர கண்காணிப்பில் இருப்பதாகவும் பிரச்சனையை சமாளிக்க அங்கு முகாமிட்டு இருப்பதாகவும் ஐக்கிய நாடுகள் உணவு, விவசாய அமைப்பு தெரிவித்துள்ளது.