Breaking News

நியூசிலாந்தில் பூர்வக்குடி மாவோரி இன மக்களுக்கு தடுப்பூசி செலுத்துவதில் போதிய அக்கறை செலுத்தவில்லை என்று கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளது.

There has been strong criticism that indigenous Maori in New Zealand have not paid enough attention to vaccination.

நியூசிலாந்து மக்களில் 80% பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டதாகவும், ஆனால் மாவோரி இன மக்களுக்கு தடுப்பூசி செலுத்துவதில் போதிய கவனம் செலுத்தவில்லை என்றும் கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டென், தேசிய தடுப்பூசி திட்டத்தில் மாவோரி சமூகத்திற்கு தடுப்பூசியை கொண்டு சேர்ப்பதில் அரசு தவறிவிட்டதை ஒத்துக்கொண்டுள்ளார்.

There has been strong criticism that indigenous Maori in New Zealand have not paid enough attention to vaccinationநியூசிலாந்தில் பெரும்பான்மை நியூசிலாந்து மக்களுக்கு 92% பேரும், மாவோரி இன மக்களில் வயது முதிர்ந்தவர்களுக்கு 94% பேருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. ஆனால் மாவோரி இன மக்களில் 35 வயதுக்குட்பட்டவர்களை எடுத்துக்கொண்டால் வெறும் 48% நபர்களுக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதற்கு நேர் எதிராக, நியூசிலாந்து பெரும்பான்மை மக்களில் இந்த 35 வயதுக்குட்பட்டோருக்கு 80% தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள மாவோரி இன குழுவின் அதிகாரி மைக் ஸ்மித், வயது முதிர்ந்தவர்களுக்கு முன்னுரிமை என்பதன் அடிப்படையில் எடுக்க பட்ட தேசிய தடுப்பூசி கொள்கை முடிவு , மாவோரி இன மக்களுக்கு பாதகமாக அமைந்ததாக குறிப்பிட்டுள்ளார். அதாவது இந்த இனத்தில் மக்களின் சராசரி வயது 26, பெரும்பாலும் இளைஞர்களே உள்ளனர். இதனால் இவர்களுக்கு மிக தாமதமாகவே தடுப்பூசி கிடைத்துள்ளது.

மாவோரி மக்களுக்கு தடுப்பூசி கிடைக்க பல உயிரிழக்க வேண்டியிருப்பதாக ஸ்மித் வேதனை தெரிவித்துள்ளார். இந்த வேறுபாடு மாவோரி இன மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ள நிலையில், அதனை சரி செய்யும் முயற்சிகளில் ஜெசிந்த அட்ரென் தலைமையிலான அரசு இறங்கியுள்ளது.

Link Source: https://bit.ly/3aXAHJW