Breaking News

நியூ சவுத் வேல்ஸ் உள்ளிட்ட தென் மாகாண எல்லைகளை தற்போது திறக்கும் திட்டம் இல்லை : குயின்ஸ்லாந்து திட்டவட்டம்

There are currently no plans to open southern provincial borders, including New South Wales. to Queensland Plan

நியூ சவுத் வேல்ஸ் உள்ளிட்ட தென் மாகாணங்களில் மக்கள் தொகையில் 80% பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்ட பின்னரே அதன் எல்லைகளை திறப்பது தொடர்பாக முடிவு எடுக்கப்படும் என்று குயின்ஸ்லாந்து துணை பிரீமியர் Steven Miles கூறியுள்ளார்.

கடந்த சில நாட்களாக குயின்ஸ்லாந்து நியூ சவுத் வேல்ஸ் எல்லைகளில் நூற்றுக்கும் மேற்பட்டோர் ஒன்று கூடி எல்லைகளை திறக்கக் கோரி பதாகைகளை ஏந்தியபடி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

There are currently no plans to open southern provincial borders, including New South Wales. to Queensland Plan.அதேநேரத்தில் குயின்ஸ்லாந்தில் ஒருநாளில் எந்தவித தொற்றும் பதிவாகாத நிலையில், நியூ சவுத் வேல்ஸில் ஒரேநாளில் சமூக பரவல் மூலமாக 830 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதியாகியுள்ளது. மூன்று பேர் உயிரிழந்தனர். நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் குறிப்பிட்ட தடுப்பூசி இலக்கை நிறைவேற்றும் பட்சத்தில் எல்லைகளை திறப்பது தொடர்பாக உரிய முடிவு எடுக்கப்படும் என்றும் துணை பிரீமியர் Steven Miles தெரிவித்துள்ளார்.

வைரஸ் பாதிப்பில் இருந்து நம்மை தற்காத்துக் கொள்வதற்கு தடுப்பூசி மட்டுமே நம்மிடம் உள்ள ஒரே ஆயுதம் என்றும் அதனை விரைந்து செலுத்துவதன் மூலமாகவே எல்லைகளை திறக்கும் நடவடிக்கையை மேற்கொள்ள முடியும் என்றும் குயின்ஸ்லாந்து துணை தலைமை சுகாதார அதிகாரி James Smith கூறியுள்ளார்.

எலிகளை திறப்பதை தொடர்பான போராட்டத்தில் யாரும் ஈடுபட வேண்டாம் என்றும் நிலைமையை உணர்ந்து செயல்பட்டால் நாம் உரிய நேரத்தில் கட்டுப்பாடுகளில் இருந்து விடுபடலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறை கலைந்து செல்லுமாறு அறிவுறுத்துவதும், ஒரு சிலரை கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. போராட்டக் களங்கள் தொற்று பரவல் மையங்களாக மாறிவிடக் கூடாது என்பதையும் தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது.

Link Source: https://bit.ly/3y3RfJi