அந்நாட்டின் ஓண்டோ மாநிலத்திலுள்ள ஓவோ என்கிற பகுதியில் புனிதர். ஃபிரான்சிஸ் கத்தோலிக்க திருச்சபை தேவாலயம் அமைந்துள்ளது . கடந்த ஞாயிறன்று வழிபாட்டுக் கூட்டம் நடந்துக் கொண்டிருந்தபோது, துப்பாக்கியுடன் புகுந்த மர்ம நபர்கள் தேவாலயத்தில் இருந்தவர்களை பார்த்து துப்பாக்கியால் சுட்டனர். மேலும் இரண்டு வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்தனர்.
அதை தொடர்ந்து மர்ம நபர்கள் தப்பியோடிவிட்டதாக தெரிகிறது. இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த ஓண்டோ மாநில காவல்துறையினர் படுகாயங்கள் அடைந்தவர்களை மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர். மேலும் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு உடற்கூராய்வுக்காக அனுப்பி வைத்தனர். இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த ஓண்டோ மாநில காவல்துறை செய்தி தொடர்பாளர் ஃபன்மில்யோ இபுகன் ஒடுனாலம்பி, தேவாலயத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் சிக்கி 50 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர் என்று கூறினார்.
தொடர்ந்து நைஜிரியா நாட்டின் அதிபர் மொஹமத் புஹாரி இந்த தாக்குதலுக்கு கண்டனங்கள் தெரிவித்துள்ளார். மேலும் வாடிகன் நகர் போப் ஃபிரான்சிஸ், கொண்டாட்டத்தின் ஒரு தருணத்தில் வலிமிகுந்த சம்பவமாக இது அமைந்துள்ளது என்று இரங்கல் பதிவு செய்துள்ளார்.