Breaking News

கொரோனா பெருந்தொற்றால் ஏற்படும் பேரழிவை உலகம் தடுத்திருக்க முடியும் : நிபுணர்கள் குழு தகவல்

The world could have prevented the catastrophe caused by the corona epidemic, expert panel information

கோவிட்-19 பெருந்தொற்று தொடர்பாக ஜெனிவாவில் நடைபெற்ற சர்வதேச நிபுணர்கள் கருத்தரங்கில், உலக நாடுகள் கொரோனா பெருந்தொற்றால் ஏற்படும் பேரழிவை தடுத்திருக்க வேண்டும் என்று கூறியுள்ளனர். மிக மோசமான ஒருங்கிணைப்பும், குழப்பமும் ஒரு நச்சுக்கலவையை போல் செயல்பட்டு கொரோனா எச்சரிக்கையை கவனிக்கப்படாத இடத்திற்கு கொண்டு போய் விட்டு விட்டதாக தெரிவித்துள்ளனர்.

தொடர் தவறான முடிவுகளின் காரணமாக, இது வரை 30 லட்சம் பேரின் உயிரிப்பும், சர்வதேச பொருளாதாரத்தை சூறையாடி உள்ளதாக பெருந்தொற்றுக்கு தயாராவது மற்றும் தடுப்பது தொடர்பான சர்வதேச நிபுணர்கள் குழு கூறியுள்ளது. ஆட்சியாளர்கள் உரிய நேரத்தில் சரியான முடிவுகளை எடுத்து மக்களை பாதுகாக்க தவறி விட்டார்கள் என்றும் IPPPR தெரிவித்துள்ளது.

The world could have prevented the catastrophe caused by the corona epidemic. expert panel informationசீனாவின் யுனான் மாகாணத்தில் 2019ஆம் ஆண்டு தொடங்கிய கொரோனா தொற்று 2020 பிப்ரவரி மாதத்தில் வேகம் எடுப்பதற்கு முன்னதாக உலக நாடுகள் முன்னெச்சரிக்கையாக எந்தவித நடவடிக்கையும் எடுக்கத் தவறிவிட்டன. கடினமான பெருந்தொற்று காலத்தை சமாளிப்பதற்கு பல்வேறு பணக்கார நாடுகள் ஏழை நாடுகளுக்கு தடுப்பூசிகளை வழங்கி உதவி செய்து வருகிறது என்றும் நிபுணர்கள் குழு தெரிவித்துள்ளது.

பொருளாதார ரீதியாக மேம்பட்ட நாடுகள் ஒரு அமைப்பை உருவாக்கி அதன் மூலமாக அடுத்து வரும் பெருந்தொற்றை சமாளிப்பதற்கு உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் நிபுணர் குழு கூறியுள்ளது.

மேலும் கொரோனா பேரிடர் தொடர்பான பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளை நிபுணர் குழு வழங்கியுள்ளது. அதில் மிக முக்கியமாக தடுப்பூசி போடப்பட்டு நிறைவு செய்த நாடுகள் மற்ற பின்தங்கிய நாடுகளுக்கு தடுப்பூசிகளை வழங்கி உதவி செய்யுமாறு கேட்டுக் கொண்டுள்ளது.

உலக சுகாதார நிறுவனம் மற்றும் உலக வர்த்தக மையம் மூலமாக இந்த உதவிகளை மற்ற நாடுகள் ஒருங்கிணைந்து செய்ய வேண்டும் என்றும, ஜி7 தொழில் நாடுகள் ஒன்று கூடி மருத்துவ தேவைக்கான தொழில்நுட்பங்களை வழங்குவதற்கும், தயாரிப்புகளை துரிதப்படுத்துவதற்கும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் ஜெனிவாவில் நடைபெற்ற நிபுணர்கள் குழு ஆலோசனையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கண்ட நடவடிக்கைகளை சரியான முறையில் அமல்படுத்தி பின்பற்றும் பட்சத்தில் கொரோனா பெருந்தொற்றில் இருந்து தப்பிக்க முடியும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Link Source: https://bit.ly/2SNOdKk