Breaking News

வடக்கிழக்கு சிரியாவிலுள்ள முகாம்களில் 30 குழந்தைகள் உட்பட 46 ஆஸ்திரேலியர்களை மீட்க ஆஸ்திரேலிய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபை கேட்டுக்கொண்டுள்ளது.

The United Nations has called on the Australian government to take appropriate action to rescue 46 Australians, including 30 children, from camps in northeastern Syria.

ஐ.நா-வின் மனித உரிமைகள் ஆணையத்திடம் இருந்து ஆஸ்திரேலிய அரசுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அதில், வடக்கிழக்கு சிரியாவின் அல்-ஹோல் மற்றும் ரோஜ் ஆகிய பகுதிகள் மொத்தம் 46 ஆஸ்திரேலியர்கள் பாதுகாப்பு முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அதில் 30 பேர் குழந்தைகள் ஆவர்.

The United Nations has called on the Australian government to take appropriate action to rescue 46 Australians, including 30 children, from camps in northeastern Syria,.முகாம்களில் இருக்கும் ஆஸ்திரேலியர்கள் சிலருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. அவசர மருத்துவ சேவையும் தேவைப்படுகிறது. போதிய உணவு கிடைக்காமல் அவர்கள் திண்டாடும் நிலை ஏற்பட்டுள்ளது. குழந்தைகள் பலரும் மனநிலை பாதிப்பு மற்றும் ஊட்டச்சத்து குறைபாடுக்கு ஆளாகியுள்ளனர். இதன் காரணமாக ஆஸ்திரேலிய அரசு உடனடியாக செயல்பட்டு, தங்களுடைய குடிமக்களை சொந்த நாட்டுக்கு கொண்டு செல்ல வேண்டும் இதற்கு தகுந்த நடவடிக்கைகளை அந்நாடு மேற்கொள்ள வேண்டும். இதுதொடர்பாக பிரதமர் ஸ்காட் மோரீசன் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என ஐ.நா மனித உரிமை ஆணையம் கடித்தத்தில் கேட்டுக்கொண்டுள்ளது.