Breaking News

டெல்டா வகை வைரஸ்கள் ஆல்பா வகை வைரஸ்களை விட, 40% அதிவேகமாக பரவுவதாக பிரிட்டன் சுகாதாரத்துறை செயலாளர் தெரிவித்துள்ளார்.

The UK Health Secretary has said that delta virus spread 40% faster than alpha viruses.

கடந்த ஜனவரி மாதம் பிரிட்டனில் ஏற்பட்ட கொரோனா இரண்டாம் அலையால் ஊரடங்கு விதிக்கப்பட்டது. ஆயிரக்கணக்கானவர்கள் உயிரிழக்கவும் நேரிட்டது. இதற்கு உருமாறிய ஆல்பா வகை வைரஸ் தான் காரணம் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர்.

தற்போது இந்த வகை வைரஸ்கள், ஆல்பா, காமா, பீட்டா, டெல்டா என்று உருமாற்றம் அடைந்துள்ளது.

இதில் டெல்டா வகை வைரஸ்கள் இந்தியாவில் கண்டறியப்பட்டாலும் தற்போது உலகம் முழுவதும் பரவியுள்ளது.

இந்த வகை வைரஸ்கள் ஆல்பா வகை வைரஸ்களை விட 40% அதிவேகமாக பரவுவதாக பிரிட்டன் சுகாதாரத்துறை செயலாளர் தெரிவித்துள்ளார்.

இதனால் ஜூன் 21 ஆம் தேதி கொரோனா தளர்வுகளை அறிவிக்க திட்டமிட்டிருந்த இங்கிலாந்துக்கு இது மேலும் சிக்கலை கூட்டியுள்ளது.

இந்த உருமாறிய வைரஸ்களை கட்டுப்படுத்துவதில் தடுப்பூசிகள் மிக சிறப்பாக செயல்படுவதாகவும், இரண்டு டோஸ்கள் தடுப்பூசி எடுத்துக்கொண்டவர்களுக்கு இந்த நல்ல பலனை தருவதாக சுகாதாரத்துறை அதிகாரி ஹென்காக் தெரிவித்துள்ளார்.

18 வயதை கடந்தவர்களில் பிரிட்டன் மக்கள் தொகையில் சுமார் 50% பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

The UK Health Secretary has said that delta virus spread 40% faster than alpha virusesபிரிட்டனில் 27 மில்லியன் மக்களுக்கு இரண்டு டோஸ் தடுப்புசிகளும், 40 மில்லியன் பேருக்கு ஒரு டோஸ் தடுப்பூசியும் செலுத்தப்பட்டதாக ஹென்காக் தெரிவித்துள்ளார். தடுப்பூசி செலுத்திக்கொண்டாலும் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றுமாறும் அவர் வலியுறுத்தியுள்ளார். தற்போது பிரிடடனில் பெரும்பாலும் டெல்டா வகை வைரஸ்களே கண்டறியப்பட்டு வருகிறது.

30 வயதை கடந்தவர்களுக்கும், கர்பிணிப் பெண்களுக்கும் மாடர்னா மற்றும் பைசர் தடுப்பூசிகள் தற்போது செலுத்தப்பட்டு வருகிறது.

12 வயதுக்கு அதிகமானவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவது குறித்து மருத்துவத்துறையின் ஆலோசனையை கேட்டிருப்பதாகவும் சுகாதாரத்துறை செயலாளர் ஹென்காக் தெரிவித்துள்ளார்.

Link Source: https://ab.co/3prpKGV