Breaking News

உயரமான கட்டிடத்தில் இருந்து தவறி விழுந்த 12 வயது சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

The tragic incident in which a 12-year-old boy who fell from a high-rise building died without the benefit of treatment has caused tragedy.

கடந்த திங்களன்று ஊரகப் பகுதியான மெடிங்டன்னில் புதியதாக கட்டப்பட்டு வரும் உயரமான கட்டிடத்தில் சிறுவர்கள் சிலர் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது 12 வயது சிறுவன் ஜோஸ்வா ஃபீல்டு கட்டிடத்தில் இருந்து தவறி கீழே விழுந்துவிட்டான்.

The tragic incident in which a 12-year-old boy who fell from a high-rise building died without the benefit of treatment has caused tragedyஉடனடியாக சிறுவனை மீட்ட அக்கம் பக்கத்தினர் பெர்த் குழந்தைகள் நல மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி சிறுவன் உயிரிழந்துவிட்டான். இதையடுத்து சிறுவன் ஜோஸ்வாவின் சகோதிரி சார்டே டர்னர், தனது சகோதரர் ஜோஸ்வாவின் மரணம் குறித்து சமூகவலைதளத்தில் உருக்கமாக பதிவிட்டுள்ளார். அதில், தனது தம்பியின் மரணம் எதிர்பாராத ஒன்று. எப்போதும் கதாநாயகனாக இருக்க வேண்டும் என்று கனவு கண்டவனின் கனவு நிறைவேறாமல் போய்விட்டது. சகோதரன் ஜோஸ்வா பெயரில் இணையதளம் ஒன்றை தொடங்கியுள்ளோம். இதன்மூலம் அவனுடைய உடல் உறுப்புக்களை தானமாக வழங்கப்பட உள்ளன. வேண்டுவோர் எங்களை தொடர்புகொள்ளவும் என பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக ஊடகங்களிடம் பேசிய வெஸ்டர்ன் ஆஸ்திரேலியா பகுதி காவல் ஆணையர் கோல் பிளாஞ்ச், கட்டுமான இடங்கள் குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கு பாதுகாப்பானது இல்லை என்பதற்கு இந்த சம்பவம் ஒரு எடுத்துக்காட்டு. சிறுவன் உயிரிழந்த இடத்தில் பாதுகாப்பு மற்றும் அந்த குழந்தைகள் எப்படி அங்கு வந்தனர் உள்ளிட்ட கோணத்தில் விசாரணை நடத்தப்படும் என்று தெரிவித்தார்.