நேற்று தென் ஆஸ்திரேலியாவில் புதியதாக 2816 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் 93 விழுக்காட்டினருக்கு ஓமைக்ரான் பி.ஏ. 2 திரிபு ஏற்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் மேலும் பலருக்கு கொரோனா தொற்று பாதிப்பு அதிகரிக்கக்கூடும் என்று ஆஸ்திரேலிய மருத்துவ வல்லுநர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
தற்போதைக்கு சில மாநிலங்களில் முகக்கவசம் அணிய தேவையில்லை என்று அரசு தெரிவித்துள்ளது. எனினும், அந்த உத்தரவை திரும்பப்பெற்று மீண்டும் சமூக இடைவெளி உள்ளிட்ட கட்டுப்பாடுகளை அமல்படுத்தினால், பெரும் பாதிப்பு ஏற்படுவதில் இருந்து தப்பிக்கலாம் என மருத்துவர் குழுவினர் கூறியுள்ளனர்.