Breaking News

பொதுமக்களிடையே பரந்தளவில் செய்யப்பட்டு வந்த கோவிட்-19 நோய் தொற்று பரிசோதனை நடவடிக்கைக்கு ஸ்வீடன் அரசு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

ஸ்வீட் நாட்டின் பிரபல ஊடகமான எஸ்.வி.டி நிறுவனத்துக்கு அந்நாட்டின் பொது சுகாதர நிறுவனத்தின் தலைவர் கிரையன் டெக்மார்க் சிறப்பு நேர்காணல் அளித்தார். அப்போது பேசிய அவர், ஸ்வீடன் நாட்டில் தொடர்ந்து தொற்று நோய் பரிசோதனையை மக்களிடையே மேற்கொள்ள ஒரு வாரத்துக்கு 76 மில்லியன் அமெரிக்க டாலர்கள் தேவைப்படுகிறது. இதை ஒரு மாதத்துடன் ஒப்பிட்டு பார்த்தால் 306 மில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவாகிறது.

The Swedish government has put an end to the widespread COVID-19 infection testing campaign..மிகப்பெரியளவில் பணத்தை ஒதுக்கி பரிசோதனையை மேற்கொண்டாலும் போதுமான பயன் கிடைக்கவில்லை. அதன் காரணமாக இனிமேல் முன்களப் பணியாளர்கள், மூத்த குடிமக்கள் மற்றும் தீவிர நோய் அறிகுறிகள் கொண்டவர்களுக்கு மட்டுமே கொரோனா பரிசோதனை செய்யப்படும். அதனால் மற்றவர்கள் முறையான கொரோனா வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் என்பது அவசியமாகிறது என்று கூறினார்.

ஸ்வீடன் நாடு இத்தகைய முடிவை எடுப்பதற்கு வேறொரு காரணமும் உள்ளது. இதுவரை ஸ்வீடனில் பொதுமக்களில் பலரும் தடுப்பூசி போட்டுள்ளனர். 2020-ம் ஆண்டு பிற்பகுதியில் 85 சதவீதம் மாதிரிகளில் ஆண்டிபாடிகள் இருப்பதாக அந்நாட்டின் சுகாதாரத்துறை செய்தி வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Link Source: https://ab.co/3Jk7AQ8