Breaking News

ஆஸ்திரேலியா நாட்டில் கடலில் விளையாடுவதற்காக பின்பற்றப்படும் விதிகள் தெரியாமல் மூழ்கி இறப்பவர்களில் இந்தியா, நேபாளம் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்தவர்கள் அதிகமாக இருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

The study found that people from countries including India and Nepal were more likely to drown without knowing the rules followed for playing at sea in Australia.

கடல்சார் பாதுகாப்பை வலியுறுத்தும் யு.என்.எஸ்.டபுள்யூ என்கிற குழு, கடல் நீரில் மூழ்கி இறப்பவர்கள் தொடர்பான புள்ளிவிவரங்களை வெளியிட்டது. அதில், தெற்கு ஆசிய நாடுகளில் இருந்து ஆஸ்திரேலியாவில் குடியேறியவர்கள் அதிகம்பேர் கடலில் மூழ்கி இறக்க நேரிடுவதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது.

அதற்கு காரணம் குறிப்பிட்ட நாடுகளில் இருந்து வருவோருக்கு முறையான நீச்சல் பயிற்சி இல்லை என்று தெரியவந்துள்ளது. முழு ஆடையை அணிந்துகொண்டு கடலில் இறங்குவது ஆபத்தானது. அது புதியதாக குடியேறியவர்கள் தெரிந்திருக்கவில்லை என்று ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.

The study found that people from countries including India and Nepal were more likely to drown without knowing the rules followed for playing at sea in Australia..ஆஸ்திரேலியாவில் கடல் பரப்புக்கு என்று சில நிறங்கள், குறியீடுகள் போன்றவை பின்பற்றப்படுகின்றனர். அவை எதுவும் அவர்ளுக்கு தெரிந்திருப்பதில்லை. அதேபோல ஆஸ்திரேலியாவில் 10 ஆண்டுகளுக்குள் குடியேறியவர்களுக்கு மட்டுமே இதுபோன்ற பிரச்னை இருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. புதியதாக ஆஸ்திரேலியாவுக்குள் குடியேறியவர்களை மையப்படுத்தி சர்ஃப் லைஃப் என்கிற அமைப்பு கடல்சார் பாதுகாப்பு வழிமுறைகளை வலியுறுத்தி ஒரு பரப்புரையை மேற்கொண்டுள்ளது. அதில், கடல்சார் பாதுகாப்பு குறித்த வீடியோக்கள் 20 மொழிகளில் இடம்பெற்றுள்ளன. அதனால் கடற்கரையில் நடைமுறைப் பாடங்களுடன் இணைந்து செயல்படும் விழிப்புணர்வும் நேரடியாக உருவாக்கப்படுகிறது.

Link Source: https://bit.ly/32DztTw