Breaking News

ஆஸ்திரேலியாவில் மத்திய அரசால் விநியோகிக்கப்பட்ட 5 ல் 1 தடுப்பூசி இன்னும் பயனடுத்தப்படாமல் உள்ளது ஆய்வில் தெரியவந்துள்ளது

ஆஸ்திரேலியாவில் போதிய தடுப்பூசிகள் விநியோகிக்கப்படவில்லை என்று மாநிலங்கள் குற்றம்சாட்டியுள்ளன.

மத்திய அரசு சார்பாக இது வரை சுமார் 1 கோடியே 13 லட்சம் தடுப்பூசிகள் விநியோகிக்கப்படுகின்றன. இவற்றில் சுமார் 73 லட்சம் தடுப்பூசிகள் மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது ஆய்வில் தெரியவந்துள்ளது.

மாநிலங்களின் சிறப்பு தடுப்பூசி முகாம்களில் செலுத்தபடும் தடுப்பூசிகளின் எண்ணிக்கையை ஒப்பிடும் போது, காமன்வெல்த் ஆரம்ப சுகாதார மையங்களில் செலுத்தப்படும் எண்ணிக்கை மிகக்குறைவாக உள்ளதாக முடிவுகள் தெரிவிக்கின்றன.

ஆனால் வரும் நாட்களில் மத்திய அரசால் விநியோகிக்கப்படும் தடுப்பூசி போதிய அளவு இருக்காது என்று நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

கணிசமான எண்ணிக்கையிலான தடுப்பூசிகள் வீணடிக்கப்படுவதும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

11.3 மில்லியன் தடுப்பூசிகளில் 4.3 மில்லியன் தடுப்பூசிகள் மாநிலங்களுக்கும், 6.5 மில்லியன் தடுப்பூசிகள் காமன்வெல்த் பொது மருத்துவர்களுக்கும் விநியோகிக்கப்பட்டுள்ளது.

The study found that 1 in 5 vaccines distributed by the federal government in Australia are still unused.நாட்டிலேயே அதிகபட்சமாக நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் 98% தடுப்பூசிகள் பயன்படுத்தப்பட்டுள்ளது. மேற்கு ஆஸ்திரேலியாவில் 78% தடுப்பூசிகளே பயன்படுத்தப்பட்டுள்ளன சுகாதாரத்துறை அதிகாரி ஸ்டீபன் டக்கெட் கருத்தின் படி மாநில அரசின் தடுப்பூசி முகாம்கள் சிறப்பாக செயல்படுவது மகிழ்ச்சியளிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
.
அதே நேரத்தில் மத்திய அரசு, தடுப்பூசி விநியோகத்தை துரிதப்படுத்த வேண்டும் என்று குயின்ஸ்லாந்து , நியூ சவுத் வேல்ஸ் மாகாண முதல்வர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

அண்மையில் 60 வயதுக்கு குறைவானவர்களும் அஸ்ட்ராஜெனிகா தடுப்பூசி செலுத்திக்கொள்ள முன்வரவேண்டும் என்று பிரதமர் ஸ்காட் மோரிசன் தெரிவித்துள்ளார்.

ஆனால் இந்த முடிவு மாநிலங்களுடன் ஆலோசிக்காமலேயே எடுக்கப்பட்டதாக பல்வேறு மாநில முதல்வர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

The study found that 1 in 5 vaccines distributed by the federal governmentஇது குறித்து கருத்து தெரிவித்துள்ள குயின்ஸ்லாந்து சுகாதாரத்துறை அதிகாரி ஜென்னட் யங், இளம் தலைமுறையினர் விஷயத்தில் சற்றே விழிப்புடன் இருக்கவண்டும் என்று அவர் கூறியுள்ளார். மேலும் குயின்ஸ்லாந்து மாநிலத்தில் ஜூலை 5ஆம் தேதி வரை மட்டுமே பைசர் தடுப்பூசி கையிருப்பு உள்ளதாக மாநில சுகாதாரத்துறை அமைச்சர் யுவட்டீ ஆத் தெரிவித்துள்ளார்

நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை மட்டும் சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு உள்ளது.

அண்மையில் சிட்னியில் இரண்டு வாரங்கள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு பிறகு தடுப்பூசி செலுத்துவோரின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

The study found that 1 in 5 vaccines distributed by the federal government in Australia are still unused.,காமன்வெல்த் இன் பொது மருத்துவர்கள் தடுப்பூசி செலுத்துவதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்றும் தங்கள் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும் என்றும் பெர்ஜியாக்கலின் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து கருத்து தெரிவித்த இருக்கக்கூடிய மத்திய சுகாதாரத்துறை அதிகாரி ஹண்ட் ஒவ்வொரு வாரமும் பைசர் தடுப்பூசியின் வருகை அதிகரிக்கும் என்றும் அது இரண்டு மடங்காக உயரும் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.

மருத்துவர் டக்கெட் கூறும் போது ஆஸ்திரேலியாவில் அண்மையில் அதிகரிக்கும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை காரணமாக தடுப்பூசி சொல்லிக் கொள்பவர்கபவர்களும் அதிகரிப்பார்கள் என்றும் இதன் காரணமாக தடுப்பூசி விநியோகத்தை துரிதப்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Link Source: https://ab.co/2TneW0V