Breaking News

வாரத்திற்கு 4 நாட்கள் மட்டுமே பணிபுரிந்தால் ஊழியர்களின் பணி திறனும், உற்பத்தி திறனும் அதிகரிப்பதாக ஆய்வு முடிவில் தெரியந்துள்ளது.

2015 மற்றும் 2019 ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் ஐஸ்லாந்து அரசு மற்றும் ரேயஜாவிக் நகர குழுமம்  இணைந்து சுமார் 2500 ஊழியர்களிடம் ஒரு ஆய்வினை மேற்கொண்டது.

ஐஸ்லாந்து நாட்டின் ஒட்டுமொத்த ஊழியர்களின் எண்ணிக்கையில் 1 % பேரிடம் இந்த ஆய்வு என்பது மேற்கொள்ளப்பட்டது.

The study concluded that working only 4 days a week increases the work efficiency and productivity of employees,அரசு  ஊழியர்கள், ஆசிரியர்கள், மருத்துவ பணியாளர்கள்,  சுகாதாரப்பணியாளர்கள் என்று அனைத்து தரப்பினரிடமும் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில் வாரத்திற்கு 40 மணி நேரத்திற்கு பதில் 35 அல்லது 36 மணி நேரம் பணிபுரியும் போது  ஊழியர்களின்  உற்பத்தி திறன் அதிகரிப்பதாக  அந்த ஆய்வு முடிவு தெரிவிக்கிறது. மேலும் 40 மணி நேரத்திற்கு வழங்கப்பட்ட அதே ஊதியம் 36 மணி நேரம் பணிபுரியும் போதும் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ஐஸ்லாந்து நாட்டிற்கான நீடித்த  ஜனநாயகம் என்னும் அமைப்பும், பிரிட்டனில் இருந்து இயங்கும் ஆராய்ச்சி  நிறுவனமும் இணைந்து வெளியிட்ட இந்த ஆய்வு   முடிவுகளின் அடிப்படையில் தற்போது ஐஸ்லாந்தில் 4 நாள் பணிபுரியும் சட்டபூர்வ அங்கீகாரமும், அல்லது குறைவான பணி நேரத்தை தேர்ந்தெடுப்பதற்கான உரிமையும் கிடைத்திருப்பதாக தொழிற்சங்கங்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளன.

ஐஸ்லாந்தில் பணிபுரியும் மொத்த பணியாளர்களின் சுமார் 86% இந்த ஆய்வு மூலம் பயன்பெற்றிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆய்வு மிகப்பெரிய வெற்றியடைந்திருப்பதாக  ஆராய்ச்சி நிறுவனத்தின்  இயக்குனர் வில் ஸ்டராங் தெரிவித்துள்ளார்.

இந்த புதிய முயற்சியின் காரணமாக பணியாளர்கள் மிக நேர்த்தியான திட்டமிடலுடனும், அர்ப்பணிபுடனும் பணிபுரிவதாக  ஆய்வு முடிவில் தெரியவந்துள்ளது.

இதன் காரணமாக அரசு நிறுவனங்கள் மிகவும் பயன்பெறுவதாகவும் இந்த ஆய்வு குறிப்பிடுகிறது.

The study concluded that working only 4 days a week increases the work efficiency and productivity of employeesகுறைவான வேலை நாட்கள் நடைமுறைப்படுத்தப்படுவதால், அத்தியாவசியமில்லாமல் அலுவலக கூட்டங்கள் நடைபெறுவதில்லை என்றும், நவீன தொலை தொடர்பு வசதிகள்  இந்த இடைவெளியை குறைப்பதாகவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஊழியர்களின் உடல் நலனும் அதிகரிப்பதாகவும் இந்த  ஆய்வு முடிவு தெரிவித்துள்ளது. இந்த புதிய நடைமுறை குறித்து கருத்து தெரிவித்துள்ள பெயர் குறிப்பிட விரும்பாத  மேலாளர் ஒருவர், இந்த திட்டம் கடவுள் தனக்களித்த மிகச்சிறந்த பரிசு என்று தெரிவித்துள்ளார்.

மாறி வரும் சூழலுக்கு ஏற்ப, சில முற்போக்கான முடிவுகளும் அனைத்தையும் சாத்தியப்படுத்துவதாக ஆராய்ச்சியாளர் குடுமுண்டுர் ஹரால்டுசன் தெரிவித்துள்ளார்.

Link Source: shorturl.at/fhsNV