ஆஸ்திரேலியாவின் ஒருசில மாநிலங்களில் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்த வகையில் உள்ளது. அதே சமயத்தில் பூஸ்டர் தடுப்பூசிகளை போடும் பணிகளையும் மாநில அரசுகள் முன்னெடுத்து வருகின்றன.
இந்நிலையில் கியூன்ஸ்லேண்டு மாகாணம் நேற்று கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்த விபரங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி நேற்று புதியதாக 4919 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதேபோல கோவிட்-19 வைரஸ் தொற்றால் 10 பேர் இறந்துள்ளது. 414 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர், 36 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று கியூன்ஸ்லேண்டு சுகாதாரத் துறை தகவல் தெரிவித்துள்ளது.
Link Source: https://ab.co/3s3VFjL