Breaking News

பள்ளிக் கூடத்தில் ஐந்து வயது சிறுவன் திடீரென உயிரிழந்தது தொடர்பாக தெற்கு ஆஸ்திரேலியாவில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு முதலுவதவி அளிக்க தெரியுமா என்பது தொடர்பாக மாநில அரசு விசாரணையை துவங்கியுள்ளது.

The state government has launched an investigation into whether teachers working in South Australia could be given first aid in connection with the sudden death of a five-year-old boy in a school.

தெற்கு ஆஸ்திரேலியாவின் தலைநகர் அடிலேய்டில் இயங்கும் ஆரம்பப் பள்ளியில் படித்து வந்த சிறுவன் லூகாஸ் லட்டோவுஸ் மெசாய். வகுப்பில் தனியாக இருந்த போது வாயில் எதையோ போட்டுக் கொண்டுள்ளான். இதனால் மூச்சு திணறல் ஏற்பட்டு மயங்கி கிடந்துள்ளான்.

வகுப்பறைக்குள் வந்த ஆசிரியர் சிறுவனை பார்த்து அதிர்ச்சி அடைய, உடனடியாக அவசர ஊர்தியை வரவழைத்து லூகாஸை மருத்துவமனையில் சேர்த்துள்ளது பள்ளி நிர்வாகம். ஆனால் மருத்துவமனையில் சோதனை செய்த போது சிறுவன் ஏற்கனவே உயிரிழந்துவிட்டது தெரியவந்தது.

The state government has launched an investigation into whether teachers working in South Australia could be given first aid in connection with the sudden death of a five-year-old boy in a schoolஇதையடுத்து அடிலேய்டு நகர காவல்துறை, இந்த விவகாரம் தொடர்பாக விசாரணையை துவங்கியுள்ளனர். பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு அவசர தேவைக்கான முதலுதவி செய்ய தெரியுமா என்கிற கோணத்தில் விசாரணையை துவங்கியுள்ளனர். இந்நிலையில் மகன் லூகாஸ் இறந்தது தொடர்பாக கவலை அடைந்துள்ள பெற்றோர், பள்ளி நிர்வாக கவனக் குறைவால் இந்த உயிரிழப்பு நடந்ததாக குற்றச்சாட்டியுள்ளனர். மேலும் இந்த சம்பவத்தை எடுத்துக்காட்டாக வைத்து, திர்காலத்தில் நடக்காமல் இருப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

Link Source: https://ab.co/3uOBzLU