Breaking News

நார்தன் டெரிட்டரி மாகாணத்தில் ஊரடங்கு அமலுக்கு வருவதையொட்டி தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் மற்றும் போட்டுக் கொள்ளாதவர்களுக்கான புதிய நடைமுறையை மாநில அரசு அமல்படுத்தியுள்ளது.

The state government has implemented a new procedure for those who have been vaccinated and those who have not been vaccinated since the curfew came into effect in the Northern Territory.

இன்று மதியம் 1 மணி முதல் திங்கள் பிற்பகல் வரை ஊரடங்கு அமலில் இருக்கும். இரண்டு தவணை தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் வெளியே செல்வதற்கும், பயணங்களை மேற்கொள்வதற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் தடுப்பூசி சான்றிதழை கையில் வைத்திருப்பது கட்டாயம்.

The state government has implemented a new procedure for those who have been vaccinated and those who have not been vaccinated since the curfew came into effect in the Northern Territory,தடுப்பூசி போடாதவர்கள் கோவிட் பரிசோதனை அல்லது தடுப்பூசி போடுவதற்கு, அத்தியாவச பொருட்களை வாங்குவதற்கு மற்றும் உதவி தேவைப்படக் கூடிய குடும்ப உறுப்பினர் அல்லது தங்களைத் தாங்களே பார்த்துக் கொள்ள இயலாத நபருக்குப் உதவுவதற்கு உள்ளிட்ட 3 காரணங்களுக்கு மட்டுமே வெளியே செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.

அதுவும் தடுப்பூசி போடாதவர்கள் பயணம் செய்யும் தூரம் 30 கி.மீ இருக்க வேண்டும். இதுதவிர வேறு எந்தவிதமான காரணங்கள் இருந்தாலும், அவர்கள் வெளியே நடமாடுவதற்கு அனுமதி கிடையாது என மாநில அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. உட்புறங்களில் முகக்கவசம் அணிவது, பொது இடங்களில் ஒருவருக்கொருவர் 1.5 மீட்டர் இடைவெளி விட்டு நிற்பது உள்ளிட்ட பழைய விதிமுறைகள் புதிய நடைமுறையிலும் இடம்பெற்றுள்ளன.

Link Source: https://ab.co/3JS7osh