Breaking News

நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் படிக்கும் வெளிநாட்டு மாணவர்களுக்கு அனுமதி வழங்க மாகாண அரசு முடிவு செய்துள்ளது.

The state government has decided to allow foreign students to study in the state of New South Wales.

ஆஸ்திரேலியாவில் ஏராளமான கல்வி நிலையங்களில் வெளிநாடுகளை சேர்ந்த மாணவர்கள் , மருத்துவம், ஆராய்ச்சி, பொறியியல் போன்ற துறைகளில் கல்வி பயின்று வருகின்றனர்.

கொரோனா காரணமாக இந்த மாணவர்கள் , தற்போது ஆஸ்திரேலியாவிற்கு வருவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.

The state government has decided to allow foreign students to study in the state of New South Wales..இந்நிலையில் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுவதை கருத்தில் கொண்டு முதற்கட்டமாக 500 வெளிநாட்டு மாணவர்களுக்கு அனுமதி வழங்க நியூ சவுத் வேல்ஸ் மாகாண அரசு முடிவு செய்துள்ளது. டிசம்பருக்குள்ளாக சோதனை அடிப்படையில் இந்த மாணவர்களுக்கு அனுமதி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவிற்கு வருகை தரும் மாணவர்கள், ஆஸ்திரேலிய மருந்து நிர்வாகத்துறையால் அனுமதி வழங்கப்பட்டுள்ள தடுப்புசி செலுத்தியிருப்பது கட்டாயம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாடர்னா, பைசர், அஸ்ட்ராஜெனிகா போன்ற தடுப்பூசிகளுக்கு ஆஸ்திரேலிய மருந்து பொருள் நிர்வாகத்துறை அனுமதி வழங்கியுள்ளது.

ஆனால் சீனாவின் சைனோபார்ம் தடுப்பூசி செலுத்திக்கொண்ட மாணவர்களுக்கும் ,சீன மாணவர்களுக்கும் அனுமதி கிடையாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

The state government has decided to allow foreign students to study in the state of New South Wales,தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்கள், சிறப்பு விமானத்தில் நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்திற்கு அழைத்து வருவதற்கும், இவர்களை தனிமைபடுத்துவதற்கும் ஆகும் செலவை பல்கலைக்கழகங்கள் ஏற்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சோதனை முயற்சி குறித்து கருத்து தெரிவித்துள்ள வெஸ்ட் சிட்னி பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் பார்னி குளோவர்,இது சோதனை முயற்சியாக இருந்தாலும், அவசியமான ஒன்று என தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலிய பல்கலைக்கழகத்தின் சி.இ.ஒ Catriona Jackson மாகாணத்தின் இந்த முயற்சி வரவேற்க்கதக்கது என்று பாராட்டியுள்ளார்.

கொரோனாவுக்கு முன்பு சுமார் 2,50,000 மாணவர்கள் நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் கல்வி பயின்று வந்தனர்.

தற்போது 57,000 மாணவர்கள் நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்திற்கு வருவதற்கு விருப்பம் தெரிவித்துள்ளனர்.

Link Source: https://ab.co/3kCWQTp