Breaking News

விக்டோரியாவில் ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள வணிக நிறுவனங்களுக்கு மாநில அரசு சார்பில் $250 மில்லியன் நிவாரண தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.

The state government has announced a $ 250 million relief package for businesses affected by the covid 19 in Victoria.

விக்டோரியாவில் பரவிய கொரோனா தோற்றால் மாநிலம் முழுவதும் ஜூன் 3 ஆம் தேதி வரை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய பணிகள் தவிர அனைத்து தொழில் நிறுவனங்களும், வணிக வளாகங்களும் மூடப்பட்டுள்ளன. இதன் காரணமாக பல தொழில் நிறுவனங்களுக்கு கடும் இழப்பு ஏற்பட்டுள்ளதாக வணிக அமைப்புகள் வேதனை தெரிவித்துள்ளன. பலர் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் தொழிலாளர்கள் அச்சம் தெரிவித்தனர்.

இவர்களுக்கு உதவும் வகையில் விக்டோரியா மாகாண முதல்வர் ஜேம்ஸ் மெர்லினோ ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

ஊரடங்கால் பாதிக்கப்பட்ட தொழில் நிறுவனங்களுக்கு 250$ மில்லியன் மதிப்பில் நிவாரணத்தொகை வழங்கப்படும் என்று அவர் அறிவித்துள்ளார்.

The state government has announced a $ 250 million relief package for businesses affected by the covid 19 in Victoriaசிறு குறு தொழில் நிறுவனங்களுக்கு தலா $2500 நிவாரணத்தொகை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறு வியாபாரிகள், உணவகங்கள், தேநீர் விடுதிகள், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள், என்று சுமார் 90000 தொழில் மையங்கள் இந்த அறிவிப்பு மூலம் பயன்பெறும் என்று மாநில அரசு தெரிவித்துள்ளது.

மேலும் தங்கும் விடுதிகள், மதுப்பானக் கூடங்கள், உணவு விடுதிகள் போன்றவை சுமார் $3500 வரை நிவாரணம் கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு துறைக்கு மட்டும் சுமார் $20 மில்லியன் ஒதுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கால் பாதிக்கப்பட்ட தொழில் நிறுவனங்கள் இந்த உதவி மூலம் தங்களின் தொழிலை மீண்டும் தொடங்கவும், தங்கள் பணியாளர்களுக்கு உரிய உதவியை செய்யவும் பயன்படும் என்றும் மாநில அரசு தெரிவித்துள்ளது .

ஆனால் ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள விக்டோரியாவுக்கு தேவையான உதவியை மத்திய அரசு செய்யவில்லை என்று முதல்வர் மெர்லினுவும், பொருளாளர் டிம் பலாசும் குற்றம் சாட்டியுள்ளனர்.

பல முறை கோரிக்கை விடுத்தும் மத்திய அரசு விக்டோரியாவின் கோரிக்கைக்கு செவி சாய்க்கவில்லை என்று தெரிவித்துள்ளனர்.

இதற்கு பதிலளித்த மத்திய அரசு சுகாதாரத்துறை அமைச்சர் ஹண்ட் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்த்துள்ளார்.

The state government has announced a $ 250 million relief package for businesses affected by the covid 19 in Victoria,சமூக வலைத்தளமான முகப்புத்தகத்தில் கருத்து தெரிவித்துள்ள தேசிய பொருளாளர் josh frydenberg, விக்டோரியாவுக்கு தேவையான உதவிகளை மத்திய அரசு வழங்கிவருவதாக தெரிவித்துள்ளார். விக்டோரியா மாநிலத்துக்கு மட்டும் இதுவரை $45 பில்லியன் நிதியுதவி வழங்கப்பட்டதாக தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலியாவின் வர்த்தக அமைப்பான ACTU, விக்டோரியாவில் சுமார் 5 லட்சம் பணியாளர்கள் ஊரடங்கால் பாதிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளது.

உரிய காலத்தில் தடுப்பூசியை விநியோகிக்காதது மத்திய அரசின் தோல்வி என்றும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

இது குறித்து கருத்து தெரிவித்த எதிர்கட்சி தலைவர் மைக்கல் ஓ பிரைன் மத்திய அரசு மீது விகடோரியாவின் கூறும் விமர்சனம் ஏமாற்றமளிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் விகடோரியாவில் தற்போது ஏற்பட்டுள்ள நிலைக்கு, முறையாக கட்டுப்பாடுகளை கடைபிடிக்காததும், தொற்று பரவலை கட்டுப்படுத்தாததுமே காரணம் என்றும் அவர் சாடியுள்ளார்.

Link Source: https://ab.co/3fx9FfA