Breaking News

குடும்ப வன்முறையால் பாதிக்கப்படும் பெண்களுக்கு உதவுவதற்காக செயல்பட்டு வரும் தெற்கு ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த தொண்டு நிறுவனம், தனது சேவையை நாடு முழுவதும் விரிவுப்படுத்த ஆஸ்திரேலிய அரசு 5.5 மில்லியன் டாலர் நிதி வழங்கியுள்ளது.

The South Australian charity, which works to help women victims of domestic violence, has received $ 5.5 million from the Australian Government to expand its service nationwide.

கடந்த 2010-ம் ஆண்டு முன்னாள் கணவரின் கொடுமையால் ஜாரா அப்ரஹிம்சாயித் என்கிற பெண் கொல்லப்பட்டார். நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த சம்பவத்துக்கு பிறகு அரசு குடும்ப வன்முறையால் பாதிக்கப்படும் பெண்கள் மீது தனி கவனத்தை செலுத்த தொடங்கியது.

அதனொரு பகுதியாக கொல்லப்பட்ட ஜாரா பெயரில் அவருடைய மகன் அர்மன் அப்ரஹிம்சாயித் ஒரு அறக்கட்டளையை துவங்கினார். இந்த அறக்கட்டளை தெற்கு ஆஸ்திரேலியாவில் குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்டு உதவியை நாடும் பெண்களுக்காக துடிப்புடன் செயல்பட்டு வருகிறது. ஜாரா அறக்கட்டளையின் செயல்பாடுகளை பாராட்டி, தேசியளவில் அதனுடைய சேவையை விரிவுப்படுத்தும் விதமாக அரசு சில முயற்சிகளை மேற்கொண்டது.

The South Australian charity, which works to help women victims of domestic violence, has received $ 5.5 million from the Australian Government to expand its service nationwide..அதன் முதல் முயற்சியாக 5.5 மில்லியன் அமெரிக்க டாலர்கள் ஜாரா அறக்கட்டளைக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் குடும்ப வன்முறையால் பாதிக்கப்படும் பெண்களுக்கு தொலைபேசியில் இலவச மற்றும் ரகசியமான நிதி ஆலோசனைகள் வழங்கப்படும். அதேபோன்று வீட்டை விட்டு வெளியேறும் பெண்களின் எதிர்கால வாழ்க்கைக்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும். இதுதொடர்பாக பேசிய பெண்கள் நலத்துறை அமைச்சர் அன் ரஸ்டன், ஜாரா அறக்கட்டளை மேலும் சில தொண்டு நிறுவனங்களுடன் சேர்ந்து பணியாற்றவுள்ளது. இதன்மூலம் தேசியளவில் குடும்ப வன்முறையால் பாதிக்கப்படும் பெண்கள் வாழ்வாதாரத்தை உயர்த்த முயற்சிகள் செய்யப்படும் என்று கூறினார்.

Link Source: https://ab.co/3Ke6FkY