Breaking News

பெய்ஜிங்கில் நடைபெற உள்ள குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் வீரர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும்.

குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் பெய்ஜிங்கில் நடைபெற உள்ள நிலையில், கோவிட் தொற்று காரணமாக வீரர்களுக்கு பாதிப்பு ஏற்படாத வண்ணம் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று ஒலிம்பிக் கமிட்டி தெரிவித்துள்ளது.

போட்டிகளில் பங்கேற்பதற்காக பல்வேறு நாடுகளில் இருந்து சீனா வந்த பலருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், பெய்ஜிங் தொற்றுப் பரவல் மையமாக மாறிவிடுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது.

The safety of the athletes will be ensured during the upcoming Winter Olympics in Beijingஇந்நிலையில் வீரர்கள், பயிற்சியாளர்கள், அதிகாரிகள் உள்ளிட்ட அனைவரும் இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தி இருப்பதை உறுதி செய்வதாகவும், ஒமைக்ரான் தொற்று பரவல் அதிகரித்து உள்ளதால் அனைவரும் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் ஒலிம்பிக் போட்டி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். பிப்ரவரி 4ம் தேதி தொடங்கி 20ம் தேதி வரை போட்டிகள் நடைபெற உள்ள நிலையில், வீரர்கள் சீனா வந்திறங்குவது தொடங்கி அவர்கள் பயிற்சியில் பங்கேற்பது, தங்குமிடம் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தி உள்ளதாகவும், நெருங்கிய தொடர்பில் இருப்பவர்களை கண்காணிக்கும் வகையில் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

அதே நேரத்தில் பெய்ஜிங்கில் பனிப்பொழிவு தொடங்கி உள்ளது. 20 மில்லி மீட்டர் அளவுக்கு பனிப்பொழிவு இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒமைக்ரான் தொற்று அதிகரித்துள்ள நிலையில் சீனாவுக்கு வரும் வெளிநாட்டு பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஒலிம்பிக் விளையாட்டு, மருத்துவம் உள்ளிட்ட சில காரணங்களுக்காக மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக ஒலிம்பிக் கமிட்டியின் துணைத் தலைவர் Han Zirong தெரிவித்துள்ளார்.

ஒமைக்ரான் தொற்று பரவல் அதிகரித்துள்ளதால் பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க போவதில்லை என்று தேசிய ஹாக்கி லீக் அமைப்பு அறிவித்துள்ளது.

இந்த போட்டிகளில் பங்கேற்க முடியாமல் போனதற்கு வீரர்கள் உள்ளிட்ட குழுவினர் வருத்தம் தெரிவித்துக் கொள்வதாகவும், 2026 ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொள்ள ஆர்வத்துடன் எதிர்நோக்கி காத்திருப்பதாகவும் வடக்கு அமெரிக்காவை மையமாகக் கொண்டு செயல்படும் தேசிய ஹாக்கி அமைப்பு தெரிவித்துள்ளது.

Link Source: https://bit.ly/3z1t3Jx