Breaking News

குளம்பியகம் ஒன்றில் உணவு பரிமாறும் பணியில் ரோபோ ஈடுபடுத்தப்பட்டுள்ளது வாடிக்கையாளர்களை ஆச்சரியமடையச் செய்துள்ளது.

The robot involved in serving food in one of the hoops has surprised customers.

கான்பெர்ராவில் இயங்கு வரும் குளம்பியகத்தில் ஒரு பணியிடத்தை நிரப்புவதற்கு அதன் உரிமையாளர் சாம் வெக்கிரியா நீண்ட நாட்களாக முயற்சி செய்துள்ளார். ஆனால் உணவு பரிமாறும் வேலை என்பதாலும், அதற்கு குறைந்தளவே ஊதியம் வழங்கப்படுவதாலும் பணியில் சேர யாரும் முனைப்பு காட்டவில்லை.

இதனால் அதிருப்தி அடைந்த உரிமையாளர் சாம் வெக்கிரியா, குவாண்டம் ரோபோடிக்ஸ் என்கிற நிறுவனத்தை தொடர்பு கொண்டார். அதன்பேரில் அவருக்காக ஒரு ரோபோவை தயாரித்து வழங்குவதாகவும், 3 மாதம் குளம்பியத்தில் பல்வேறு பணிகளில் ஈடுபடுத்தி சோதனை செய்து பார்க்குமாறும் நிறுவனம் தெரிவித்துள்ளது.

The robot involved in serving food in one of the hoops has surprised customersஇதற்கு வெக்கிரியா சம்மதம் தெரிவித்ததை அடுத்து, கான்பெர்ரா குளம்பியகத்தில் அந்த ரோபோ பணியில் சேர்த்துக் கொள்ளப்பட்டது. வாடிக்கையாளர்களை வரவேற்பது, மேஜை மற்றும் நாற்காலிகளை சுத்தம் செய்வது, சாப்பிட்ட தட்டுக்களை எடுப்பது என சகல பணிகளையும் அந்த ரோபோ சிறப்புடன் கையாண்டது. தற்போது கான்பெர்ரா குளம்பியத்தின் உரிமையாளர் வெக்கிரியா அந்த ரோபோவை சொந்தமாக வாங்கிவிட்டது. 30 ஆயிரம் டாலர் மதிப்புடைய ரோபோவை பராமரிப்பது எளிது என்று அவர் தெரிவித்துள்ளார்.

ஆனால் இதற்கு ஆஸ்திரேலியா தொழிலாளர் அமைப்பு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மனிதனின் செய்யக்கூடிய வேலைகளுக்கு மாற்றாக ரோபோக்களை நிறுவுவது குறைந்த கால தீர்வு மட்டுமே. இதனால் நிரந்தர தீர்வு எதுவும் ஏற்படபோவதில்லை என்று அமைப்பு கருத்து கூறியுள்ளது.