Breaking News

கொரோனா பாதுகாப்பை கருதி அரசாங்கத்தால் விடுதியில் தங்க வைக்கப்பட்ட நபர்களுக்கு வேண்டிய கியுன்ஸ்லேண்டு அரசு 26.9 மில்லியன் டாலர்களை செலவிட்டுள்ளதாக கணக்கு தெரிவித்துள்ளது.

The Queensland government is estimated to have spent $ 26.9 million on accommodation by the government for corona security.

வெளியூர் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளின் பாதுகாப்புக்காக கியூன்ஸ்லேண்டு அரசாங்கம் தனது சொந்த செலவிலேயே பணிகளை மேற்கொண்டது. அதன்படி கொரோனா பரவல் காலக்கட்டத்தில் 22 விடுதிகளில் 5114 பேர் வரை தங்க வைக்கப்பட்டனர்.

தற்போது கொரோனா பரவல் குறைந்துவிட்ட போதிலும், ஒரு சில விடுதிகளில் அறிகுறிகளுடன் மாநிலத்துக்குள் வரும் பயணிகள் தங்கவைக்கப்படுகின்றனர். இதுதொடர்பாக எதிர்க்கட்சிகள் கூட்டத்தொடரில் கேள்வி எழுப்பினர், கொரோனா தடுப்பு நடவடிக்கை என்ற பெயரில் விடுதிகளுக்காக பணம் தேவையின்றி செலவிடப்பட்டு வருவதாக தெரிவித்தனர்.

இதற்கு பதிலளித்து பேசிய கியூன்ஸ்லேண்டு துணை முதல்வர் ஸ்டீவன் மைல்ஸ், கொரோனா தடுப்பு நடவடிக்கைகாக தனியாக முகாம்கள் துவங்கப்பட்டதை அடுத்து, மாநில அரசு 8.5 மில்லியன் டாலர்களை சேமித்துள்ளது. மேலும் விடுதிகளில் எடுக்கப்பட்டு வரும் கொரோனா நடவடிக்கைகள் குறையவுள்ளன. இதனால் மாநில அரசாங்கத்தில் செலவீனங்கள் மேலும் 5.7 மில்லியன் வரை குறையும் என்று கூறினார்.

Link Source: https://ab.co/3x2eaHU