Breaking News

நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் விரைவில் கொரோனா கட்டுப்பாடுகள் ஒவ்வொன்றாக தளர்த்தப்படும் என முதலமைச்சர் டாமினிக் பெர்ரோடெட் தெரிவித்துள்ளதற்கு பொதுமக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

The public has welcomed Chief Minister Dominic Perrottet announcement that corona restrictions will soon be relaxed one by one in the state of New South Wales.

ஆஸ்திரேலியாவின் பல்வேறு பகுதிகள் கொரோனா கட்டுப்பாடுகள் தொடர்ந்து அமலில் இருந்து வருகின்றன. அதிலும் நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் கடுமையான கொரோனா கட்டுப்பாடுகள் பின்பற்றப்பட்டு வருகின்றன.

The public has welcomed Chief Minister Dominic Perrottet announcement that corona restrictions will soon be relaxed one by one in the state of New South Wales..இதுதொடர்பாக பொதுமக்கள் அதிருப்தி தெரிவித்து வருவது குறித்து மாநில முதல்வர் டாமினிக் பெர்ரோடெட்டுக்கு தெரியவந்தது. இதையடுத்து பிப்ரவரி 28க்குள், மாநிலத்தில் கொரோனா கட்டுப்பாடுகள் மெல்ல மெல்ல தளர்த்தப்படும் என அறிவிப்பு வெளியிட்டார். அதில் முதற்கட்ட அறிவிப்பாக நாளை முதல் சில கட்டுப்பாடுகள் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, மருத்துவமனை வளாகத்தில் ஆட்டம், பாட்டம் உள்ளிட்ட நிகழ்வுகள் நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளன. தேவைப்படும் இடங்களில் மட்டும் கியூ.ஆர் கோடு விதிமுறை அமலில் இருந்தால் போதும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல, நிறுவனங்கள் விருப்பப்பட்டால் ஊழியர்களை அலுவலகங்களுக்கு வரவழைத்து பணியில் அமர்த்தலாம் என்றும் மாநில அரசு அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளது. மேலும், வரும் பிப்ரவரி 25-ம் தேதி முதல் உட்புறங்களில் முகக்கவசம் அணிய தேவையில்லை உள்ளிட்ட அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Link Source: https://ab.co/3uVMsf6