தேர்தல் நடைபெறும் வாக்களிக்க முடியாதவர்கள், முன்கூட்டியே வாக்களிக்கும் மையங்களுக்குச் சென்று வாக்களிக்கலாம் என்று ஆஸ்திரேலிய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. முதல் நாளான நேற்று சுமார் 3 லட்சத்துக்கும் அதிகாமானோர் முன்கூட்டியே வாக்களிக்கும் மையங்களுக்குச் சென்று வாக்களித்துள்ளனர்.
இந்த வாக்கு மையங்கள் குறித்து அறிந்துகொள்ள வாக்காளர்கள் தேர்தல் ஆணையத்தின் வலைதளங்களுக்கு சென்று தகவல்களை பெறலாம். இதனால் வெளிநாட்டில் வசிக்கும் ஆஸ்திரேலியர்களும் சொந்த நாட்டுக்கு வந்து வாக்களித்துவிட்டுச் செல்லலாம் என்று ஆஸ்திரேலிய அரசு தெரிவித்துள்ளது. ஒருவேளை வெளிநாட்டில் இருந்து ஆஸ்திரேலிய ஃபெடரல் தேர்தலில் வாக்களிக்க விரும்புபவர்கள், தபால் மூலமாகவும் வாக்களிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. தபால் வாக்குகளை பெறுவதற்கு மே 18-ம் தேதி கடைசி நாளாகும். வரும் 21-ம் தேதி ஃபெடரல் தேர்தல் நடைபெறுகிறது. ஜூன் 3-ம் தேதி வரை பொதுமக்களிடம் இருந்து வாக்குகள் பெறப்படும்.