Breaking News

சூப்பர் மார்க்கெட்டுகளில் விற்கப்படும் பால்களின் விலை 10$ உயர்த்தப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவில் பிரபலமான பால் விற்பனை நிறுவனங்களான,கோல்ஸ், அல்டி, வூல்வோர்த் போன்றவை பாலின் விலையை 10செண்ட் உயர்த்தியுள்ளன. இதன் மூலமாக ஒரு லிட்டர் பால் விலை $1.30செண்ட்களாக உயர்ந்துள்ளது.

சில்லறை விற்பனை நிறுவனங்கள் கடந்த 2019 ஆம் ஆண்டு இறுதியாக பால் விற்பனை விலையை 10 செண்ட் உயர்த்திய பிறகு, தற்போது மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளது. 2019 ஆம் ஆண்டு ஒரு லிட்டர் பால் ஒரு டாலருக்கு விற்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. பால் பொருட்களின் விலையை உயர்த்த வேண்டும் என்று பால் பொருள் உற்பத்தியாளர்கள் கடந்த 2011 ஆண்டு முதல் வலியுறுத்தி வருகின்றனர்.

ஆனால் இந்த விலை உயர்வின் பலன் பால் உற்பத்தியாளர்களுக்கு சென்று சேருவதற்கான வாய்ப்பு குறைவாகவே உள்ளது.

பால் உற்பத்தியாளர்களின் கூட்டுறவான நார்கோ 226 மில்லியன் விவசாயிகளின் பங்களிப்புடன் ஒவ்வொரு ஆண்டும் 60 மில்லியன் பாலை விநியோகிக்கிறது.

The price of milk sold in supermarkets has been raised by $ 10இது குறித்து கருத்து தெரிவித்துள்ள நார்கோ வின் முதன்மை செயல் அதிகாரி மைக்கேல் ஹேம்சன், விலையை உயர்த்தியது என்பது அந்தந்த நிறுவனங்களின் முடிவு என்றும் அதனை தான் வரவேற்பதாகவும் தெரிவித்துள்ளார். கடந்த 2020-21 நிதியாண்டில் கோல் நிறுவனம் $1.01 பில்லியன் லாபம் ஈட்டியுள்ளது. அதே நேரம் பால் பொருட்களின் விலை உயர்வின் பலன் பால் உற்பத்தியாளர்களுக்கு சென்று சேரவேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஷான் மோர்கன், உற்பத்தியாளர்களுக்கு இந்த பலன் சென்று சேர்வதை சூப்பர் மார்கெட் நிறுவங்கள் உறுதி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

அதே போன்று அல்டி நிறுவனமும் அதன் பால் விலையை 10செண்ட் உயர்த்தியுள்ளது. ஒரு லிட்டர் பால் $1.30 செண்ட்களுக்கு விற்கப்படுகிறது. அல்டி நிறுவனத்தின் பால் பொருட்களின் விலையை உயர்த்த ஆலோசித்து வருவதாக அதன் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். ஆனால் இந்த விலை உயர்வின் பலனை உற்பத்தியாளர்களுக்கு தருவது குறித்த எந்த தகவலையும் அல்டி நிறுவனமும் உறுதி செய்யவில்லை.

Link Source: https://ab.co/31nRW5W

leave a reply