Breaking News

உக்ரைனில் நீடித்து வரும் போர் காரணமாக பல்வேறு மேற்குலக நாடுகளிடம் உதவி கோரி வரும் உக்ரைன் அதிபர் ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக உரையாற்றினார். அப்போது, நாங்கள் உண்மையில் சுதந்திரத்திற்காகவும், ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்காகவும் ஒன்றாக போராடுகிறோம் என்றால், இந்த கடினமான திருப்புமுனையில் உதவி கோர எங்களுக்கு உரிமை உண்டு என செலன்ஸ்கி தெரிவித்தார்.

The President of Ukraine, who has been seeking assistance from various

டாங்கிகள், விமானம், பீரங்கி அமைப்புகள் வேண்டும். சுதந்திரம் என்பது கொடுங்கோன்மையை விட மோசமான ஆயுதமாக இருக்க வேண்டும். நாங்கள் இதற்கு தயாராகி வருகிறோம் என்று கூறினார்.

சர்வதேச துறைமுகங்களில் இருந்து ரஷ்ய கப்பல்கள் தடை செய்யப்பட வேண்டும். மற்ற நாடுகளை தங்கள் அணுசக்தி ஏவுகணைகள் மூலம் அச்சுறுத்துவதை நிறுத்தும் வரை சக்திவாய்ந்த பொருளாதாரத் தடைகள் விதிக்க வேண்டும். உங்களிடம் மிகச் சிறந்த ஆயுதமேந்திய பணியாளர்கள் வாகனங்கள், புஷ்மாஸ்டர்கள் உள்ளன. அவை உக்ரைனுக்கு கணிசமாக வழங்கி உதவ வேண்டும். பிற உபகரணங்களும் வழங்க வேண்டும் என்று செலன்ஸ்கி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பல்வேறு தரப்புக்கான சலுகைகளை உள்ளடக்கிய ஆஸ்திரேலிய பட்ஜெட் 2022 குறித்து எதிர்க்கட்சித் தலைவர் ஆன்டனி பாராளுமன்றத்தில் உரையாற்ற உள்ளார். எதிர்வரும் தேர்தலை மையமாகக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள பட்ஜெட் குறித்த எதிர்க்கட்சித் தலைவரின் உரை மிக முக்கிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. பாதுகாப்புத்துறை, முதியோர் பராமரிப்பு, பெண்கள் பாதுகாப்பு, வரிச்சலுகை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் கடும் விமர்சனங்களை தெரிவித்து வந்த எதிர்க்கட்சி பட்ஜெட் அறிவிப்புகள் குறித்து தெரிவிக்கப்படும் கருத்துக்கள் தேர்தலில் எதிரொலிக்கும் என்று அரசியல் நிபுணர்கள் கூறியுள்ளனர்.

The President of Ukraine, who has been seeking assistanceஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் ரக்பி விளையாட்டு வீரரான Hannah Clarke தனது மூன்று குழந்தைகளுடன் காரில் எரித்துக் கொல்லப்பட்ட விவகாரம் தொடர்பாக தவறிழைத்தவர்கள் நிச்சயம் தப்ப முடியாது என அவரது பெற்றோர் தெரிவித்துள்ளனர். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற இந்த சம்பவம் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள அவரது தாய் கொலை செய்யப்பட்ட அந்த காலகட்டத்தில் Hannah காவல்துறை அதிகாரி ஆதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வந்ததாக தெரிவித்துள்ளார்.

பிரிஸ்பேனில் பள்ளி ஒன்றில் மாணவர் சேர்க்கையின் போது பாலின அடையாளம் மற்றும் பாலின வகைமைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்ற உத்தரவை பிறப்பிக்கப்படதற்கு கடும் எதிர்ப்பு எழுந்தது. இதனை அடுத்து, பள்ளி முதல்வர் பாஸ்டர் Brian Mulheran தனது வேலையில் இருந்து ராஜினாமா செய்துள்ளார். மாணவர்களை பள்ளியில் சேர்க்கும் போது பெற்றோர்களிடம் கையெழுத்து வாங்கப்படும் ஒப்பந்தத்தில் பாலியல் வகைமைகள் தொடர்பாக பல்வேறு சர்ச்சைக்குரிய கேள்விகள் எழுப்பப்பட்டு இருந்ததாகவும், இதுதொடர்பாக பெற்றோர்களிடம் இருந்து கடும் எதிர்ப்பு எழுந்ததை அடுத்து இது குறித்து விசாரணை நடத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

மெல்போர்ன் நகரில் ஹெலிகாப்டர் ஒன்று மலை முகட்டில் மோதி விபத்துக்குள்ளான சம்பவத்தில் 5 பேர் உயிரிழந்தனர். 2 ஹெலிகாப்டர் மேற்கு மெல்போர்ன் பகுதியில் மேலே பறந்த நிலையில் ஒரு ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த 5 பேர் உயிரிழந்து விட்டதாக காவல்துறை அறிவித்துள்ளது. இது தொடர்பான விவரங்கள் இணையத்தில் அதிகம் தேடப்பட்டுள்ளன.

Link Source: https://ab.co/3wUhLIh