Breaking News

அமேசான் மழைக்காடுகளில் ஏற்பட்ட விமான விபத்தில் சிக்கிய விமானி ஒருவர் 36 நாட்களுக்கு பிறகு உயிருடன் கண்டுபிடிக்கப்பட்டது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

The pilot who was found alive 36 days after a plane crash in the Amazon rainforest has caused resilience.

ஆண்டோனியோ சேனா, தொழில்முறை விமானியான இவர் , கொரோனா பரவலால் போதிய வருமானம் இல்லாமல் இருந்து வந்துள்ளார். அப்போது சிறிய கிளைடர் விமானம் ஒன்றில் அலென்கர் நகரத்தில் இருந்து அமேசான் காட்டுப்பகுதியில் செயல்படும் மைக்குரு தங்க சுரங்க நிறுவனம் ஒன்றுக்கு 600 லிட்டர் டீசல் கொண்டு செல்ல வேண்டும் என்றும், அதற்கு 750 டாலர் ஊதியம் கிடைக்கும் என்பதால் அந்த பணியை ஒப்புக்கொண்டுள்ளார்.

சிறிய ரக விமானத்தில் அலென்கர் நகரத்தில் இருந்து புறப்பட்டு, பிறகு 450 ஹெக்டேர் பரப்பளவுள்ள அமேசான் மழைக்காடுகள் மீது பறந்துக்கொண்டிருக்கும் போது எதிர்பாராத விதமாக எஞ்சினுக்கு செல்லும் எரிபொருள் குழாயில் கோளாறு ஏற்பட்டுள்ளது. சூழ்நிலையை புரிந்துக்கொண்ட அவர் அடுத்தது என்ன செவ்வது என்பது குறித்து யோசித்து உடனடியாக செயல்பட தொடங்கினார்.
மிக உயரமான பனைமரங்கள் நிறைந்த பகுதிகளை தேடியவாறு தன்னுடைய விமானத்யை மரத்தின் மீது இறக்க முடிவு செய்தார். இதனால் தரையுடன் ஏற்படும் உராய்வு தவிர்க்கப்பட்டு தீ விபத்தில் இருந்து தப்பிக்க முடிவெடுத்தார். இறுதியாக தன்னுடைய ரேடியோ அலைவரிசையில் “மே டே” மே டே என்று அபாய ஒலியை எழுப்பி விட்டு விமானத்தை கிடைத்த தோதான இடத்தில் தரையிறக்கினார்.

The pilot who was found alive 36 days after a plane crash in the Amazon rainforest has caused resilienceஎதிர்பார்த்தை விட மிக மோசமாகவே விமானம் தரையிறங்கியிருந்தது. கன்விழித்து பார்த்த போது விமானத்தின் பாகங்கள் தன்னை சுற்றி சிதறி இருப்பதையும் நூழிலையில் தான் உயிர் தப்பியதையும் அவர் உணர்ந்துக்கொண்டார். பிறகு விமானத்தில் இருந்த சில ரொட்டி துண்டுகள் கத்தி, லைட்டர், ஆடையுடன் விமானத்தில் இருந்து கீழ் இறங்கினார்.

அடர் வனம் என்பதால் தொலைதொடர்பு செயல்படவில்லை. 460 ஹக்டேர் பரப்பளவில் உள்ள காட்டுப்பகுதியில் தான் எங்கிருக்கிறோம் என்பது தெரியாத நிலையில் தன் கைவசம் இருந்த மேப் உதவியுடன், விமானம் இறுதியாக தரையிறங்கிய போது அதில் பதிவான இடத்தையும் ஒப்பிட்டு தான் இருக்கும் இடத்தை அடையாளப்படுத்திக்கொண்டார்.

தன்னை தேடும் மீட்புக்குழு தன்னுடைய விமானத்தின் சிதறிய பாகங்களை கண்டறியும் என்றும் ,அதனால் விமானத்தின் அருகிலேயே அவர் இருக்கத்தொடங்கினார். 5 நாட்களில் அவர் விமானம் விழுந்த இடத்தை மரங்கள் மூடத்தொடங்கியதால் மேலிருந்து இந்த இடத்தை அவ்வளவு எளிதாக பார்க்க முடியாது என்பதை உணர்ந்துக்கொண்டார்.

இந்த 5 நாட்களும் தன்னிடம் உள்ள லைட்டர் போன்ற கருவிகளை வைத்து கிடைத்த பொருட்களை கொண்டு உயிர் வாழ்ந்து வந்தார்.

ஆனால் கண்ணுக்கெட்டிய தூரம் வரைக்கும் ஆட்கள் நடமாட்டமோ, எந்த சப்தமும் இல்லாததால் எந்த பக்கம் போவது என்று தெரியாமல், மேப் உதவியுடன் தான் புறப்பட்ட இடத்தின் திசையை நோக்கி நடக்கத்தொடங்கினார்.

இதனிடையே பணிக்கு சென்ற தன்னுடைய சகோதரன் குறித்து எந்த தகவலும் இல்லாததால் மீட்பு விமானத்தின் உதவியுடன் அவரை தேடத்தொடங்கினார்கள்.

சில நேரங்களில் தனக்கு மேல் ஹெலிக்காப்டர் பறக்கும் சத்தம் கேட்கும் போது தன்னால் முடிந்த அளவு கூச்சலிட்டதாகவும் ஆனால் அவ்வளவு தூரம் அவர்களால் பார்க்க முடியாமல் அவர் சென்றுவிடுவார்கள்.

8 நாள் தேடுதலுக்கு பிறகு விமானப்படை அவர்களின் பணியை நிறுத்திக்கொண்டது.

The pilot who was found alive 36 days after a plane crash in the Amazon rainforest has caused resilience..ஆனால் நம்பிக்கை இழக்காத அவரின் சகோதரி மரியானா மற்றும் சகோதரர் தியாகோ சமூக ஊடகங்களின் மூலம் ஆதரவு திரட்டி, அவரை கண்டுபிடித்து தருபவர்களுக்கு சன்மானம் என்றும் அறிவித்தனர். ஆண்டோனியோ 30 நாட்களை கடந்தும் மனிதர்களின் நடமாட்டத்தை தேடிக்கொண்டிருந்தார். போதிய உணவு இல்லாததால் சுமார் 25 கிலோ வரை அவர் எடை குறைந்திருந்தார்.

அமேசான் காடுகளில் இரவில் உயிர் வாழ பகல் முழுவதும் தன்னை தயார்படுத்திக்கொள்ள வேண்டியதாக இருந்தது.

மேலும் இரவு நேரங்களில் சிறுத்தை புலியின் சப்தமும் விலங்குகளின் சத்தமும் தன்னை அச்சுறுத்தியதால் ஆண்டோனியோ மிக பாதுகாப்பாக இருக்க வேண்டியதை உணர்ந்திருந்தார்.

36 ஆம் நாள் காட்டுப்பகுதியில் சில வண்ணங்கள் பூசப்பட்டிருப்பதை ஆண்டோனியோ பார்த்தார். மிக சோர்வடைந்த நிலையில் இருந்தவருக்கு தான் நினைப்பது சரிதானா என்று கூறியவாரே அங்கு சுற்றிலும் பார்த்த போது சிலர் கொட்டைகளை சேகரித்துக்கொண்டிருப்பதை கவனித்து ,தன்னை பற்றிய விவரத்தை தெரிவித்தார்.
தான் மிக பசியுடன் இருப்பதாகவும், அந்த கொட்டைகளில் சிலவற்றை கொடுக்கும் மாறும் அவர் கேட்டுக்கொண்டார்.

பிறகு அவர்கள் ஆண்டோனியோவை தங்கள் இல்லத்திற்கு அழைத்துச்சென்றனர்.

தேடுதல் பணியில் ஈடுபட்டிருந்த மாரியானோவிற்கு தன் சகோதரர் கிடைத்துவிட்டதாக வந்த செய்தியறிந்து மிகவும் மகிழ்ச்சியடைந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

36 நாட்கள் அடர் வனத்தில் போராடி மீண்டு வந்த ஆண்டோனியோவின் அனுபவம் நெகிழ்ச்சியையும்,தன்னமிக்கையையும் ஏற்படுத்துகிறது.

Link Source: https://ab.co/3fy91OE