பிரிஸ்பேனைச் சேர்ந்த ராபர்ட் லூயிஸ் கிப்ஸன், கடந்த 2018-ம் ஆண்டு கிம் மிச்செல் (61) என்பவரை எர்ரோங்கே என்கிற பகுதியில் வைத்து கொடூரமாக கொலை செய்தார். அதை தொடர்ந்து போலீசாரிடம் இருந்து தப்பிக்க முயன்ற போது குற்றவாளி ராபர்ட், 21 வயதான பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
இதுதொடர்பான வழக்கை பிரிஸ்பேனில் உள்ள உச்சநீதிமன்றம் விசாரித்து வந்தது. அதில் கிம் மிச்செலை கொன்றது மற்றும் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த குற்றங்களை ராபர்ட் லூயிஸ் ஒப்புகொண்டார். அதை தொடர்ந்து அவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.