அண்மையில் நடந்த 94வது ஆஸ்கர் விருது வழங்கும் நிகழ்ச்சியில், ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித் பங்கேற்றார். அப்போது நிகழ்ச்சி தொகுப்பாளர் கிறிஸ் ராக், வில் ஸ்மித்தின் மனைவியின் புறத்தோற்றம் குறித்து,கேலி செய்த பேசியதால், கோபமடைந்த வில் ஸ்மித் கிறிஸ் ராக்கின் கன்னத்தில் அறைந்தது கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்த விவகாரம் குறித்து அப்போதே மன்னிப்பு கோரிய வில் ஸ்மித், அகடெமியின் நடவடிக்கையை ஏற்றுக்கொள்வதாகவும் தெரிவித்திருந்தார். இந்நிலையில் ஆஸ்கர் அகடெமியின் தலைவர் டேவிட் ரூபின் மற்றும் முதன்மை செயல் அதிகாரி டான் ஹட்சன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் ஆஸ்கர் அகடெமி சார்பில் நடத்தப்படும் அனைத்து நிகழ்ச்சிகளில் பங்கேற்க வில் ஸ்மித்துக்கு தடை விதிக்கப்படுவதாக தெரிவித்துள்ளனர்.
வில் ஸ்மித்தின் நடவடிக்கை, ஒட்டு மொத்த நிகழ்ச்சியை தவறான கண்ணோட்டத்தில் மக்கள் மத்தியில் ஏற்படுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரம் வில் ஸ்மித் நடித்த படங்கள் ஆஸ்கர் போட்டியில் பங்கேற்பது குறித்த எந்த கருத்தும் தெரிவிக்கப்படவில்லை.
ஆஸ்கர் அகடெமியின் முடிவை ஏற்றுக்கொள்வதாக தெரிவித்துள்ளதாக வில் ஸ்மித், அவர்களின் முடிவுக்கு கட்டுப்படுவேன் என்றும் தெரிவித்துள்ளார். மேலும், தன்னுடைய அகடெமி உறுப்பினர் பதவியையும் ஸ்மித் ராஜினாமா செய்துள்ளார். இதன் மூலம், அகடெமி சார்ந்த முடிவுகளில் வாக்களிக்கும் தகுதியையும் இழந்துள்ளார்.
நடந்த நிகழ்வுகளுக்கு, நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவரிடமும் வருத்தம் தெரிவித்துள்ள அகடெமி, தொகுப்பாளர் கிறிஸ் ராக்கை பாராட்டியுள்ளது.
Link Source: https://ab.co/3EiXfTr