Breaking News

விக்டோரியாவில் புயல் தாக்குதலால், மாநில அவசர கட்டுப்பாட்டு அறைக்கு வரும் அழைப்புகளின் எண்ணிக்கை 25% அதிகரித்துள்ளது.

The number of calls to the state emergency control room has increased by 25% since the storm hit Victoria

விக்டோரியாவின் மத்திய மேற்கு பகுதியில் புயல் பாதிப்பு அதிகரித்துள்ளது. இதனால் இதுவரை இல்லாத வகையில் பொதுமக்கள் உதவிக்காக மாநில அவசர கட்டுப்பாட்டு அறையை தொடர்புக்கொள்வது அதிகரித்துள்ளது.

கொரோனா ஊரடங்குக்கு பிறகு இந்தாண்டு 2600 அழைப்புகள் கூடுதலாக கட்டுப்பாட்டு அறைக்கு வந்திருப்பதாகவும், இது கடந்தாண்டை விட 25% அதிகம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The number of calls to the state emergency control room has increased by 25% since the storm hit Victoria.அதிலும் குறிப்பாக பாலாரட் பகுதிக்கு மட்டும் 1042 அழைப்புகள் வந்ததாகவும், புயலின் காரணமாக இந்த எண்ணிக்கையை கட்டுப்பாட்டு மையம் சந்தித்திருப்பதாக கட்டுப்பாட்டு அறையின் முதன்மை செயல் அதிகாரி ஸ்டீபன் கிரிப்பின் தெரிவித்துள்ளார். இப்பகுதி மோசமான வானிலையை அண்மைகாலமாக சந்தித்து வருகிறது. புயல் சேதங்களை சரி செய்யும் பணியில் அவசர கால ஊழியர்கள் தீவிரமாக பணிபுரிந்து வருகிறனர். புயல் காற்றின் காரணமாக ஏராளமான மரங்கள் முறிந்து விழுந்துள்ளன.

அடிக்கடி ஏற்படும் புயல் பாதிப்புகள், அவசர கட்டுப்பாட்டு துறை பணியாளர்கள் மீது கடும் நெருக்கடியை ஏற்படுத்துவதாக ஸ்டீபன் கிரிப்பின் தெரிவித்துள்ளார். கடந்த அக்டோபர் மாதத்தில் ஏற்பட்ட கன மழை பாதிப்பையே இன்னும் சரி செய்ய வேண்டியுள்ள நிலையில், அடிக்கடி ஏற்படும் பாதிப்புகள் மேலும் சிக்கலை ஏற்படுத்துகிறது.

The number of calls to the state emergency control room has increased by 25% since the storm hit Victoria,
பலாராட் பகுதியில் கடந்த 48 மணி நேரத்தில் மட்டும் 285 அழைப்புகள் வந்துள்ளதாகவும், அப்பகுதியில் 100கிமீ வேகத்தில் காற்று வீசியதாலும், ஆலங்கட்டி மழை பெய்ததன் காரணமாக கடும் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. VICSES ஆய்வில் கொரோனா பாதிக்கப்பட்ட 2019-2021 வருடங்களில் தான் அதிகளவு அவசர கட்டுப்பாட்டு அறைக்கு அதிக அழைப்புகள் வந்திருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இந்த புயல் பாதிப்புகளை சரிசெய்ய தன்னார்வலர்கள் சுமார் 5 லட்சம் மணி நேரத்தை செலவிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Link Source: https://ab.co/3qLO9tz