கடல் வழியாக படகில் வந்து ஆஸ்திரேலியாவில் அகதிகள் தஞ்சம் அடைவதற்கு ஆஸ்திரேலிய அரசு தடை விதித்தது. மனித உரிமைக் குழுக்கள் இந்த தடுப்புக்காவல் சர்வதேச சட்டத்தை மீறுவதாகக் கருதின.
இந்நிலையில் ஆஸ்திரேலியாவின் உள்துறை அமைச்சர் கேரன் ஆண்ட்ரூஸ் மற்றும் நியூசிலாந்து நாட்டின் குடியேற்றம் துறை அமைச்சர் கிறிஸ் ஃபாபோய் இருவரும் சேர்ந்து கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர். அதில், அகதிகளை மீள்குடியேற்றம் செய்யும் நடவடிக்கை மூன்றாண்டுகளுக்கு தொடரும் என கூறியுள்ளனர்.
கடந்த 2013-ம் ஆண்டு முதல் இதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. தற்போது தான் இந்த மீள்குடியேற்ற நடவடிக்கை முழு வடிவம் பெற்றுள்ளது. இருநாட்டு அரசுகள் எடுக்கும் இந்த முயற்சியால் அகதிகள் சராசரி வாழ்க்கை வாழ வழிவகுக்கும் என்று மனிதநல ஆர்வலர்கள் பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.
Link Source: https://ab.co/3wCiqOr