சிட்னியின் கிழக்கு பகுதியில் தற்போது வரை 9 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய நியூ சவுத் வேல்ஸ் மாகாண முதல்வர் கிளாடியஸ் பெர்ஜியாக்கிலியன், தொற்று பரவல் அதிகரிப்பதால் மாகாணத்தில் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிப்பது அவசியம் என்று தெரிவித்துள்ளார்.
அதன்படி கிரேட்டர் சிட்னி மற்றும் புளூ மவுண்டன் பகுதியிகளில் பொதுப் போக்குவரத்தில் பயணிக்கும் மக்கள் கடடாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. அதேபோல் ஷெல் ஹார்பர் பகுதிகளுக்கும் இந்த கட்டுப்பாடு பொருந்தும் என்று முதல்வர் தெரிவித்துள்ளார். வணிக வளாகங்கள், சில்லறை வர்த்தக கடைகள், சினிமா அரங்குகள், முதியோர் இல்லங்கள், போன்ற இடங்களில் முகக்கவசம் கட்டாயம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
நியூ சவுத் வேல்ஸ் மாகாண சுகாதாரத்துறை அதிகாரி Kerry Chant பேசிய போது , சில இடங்களில் தளர்வுகள் இருந்தாலும் அந்த இடங்களில் மக்கள் சுயக்கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
பள்ளிக்கூடங்கள், உடற்பயிற்சி கூடங்கள் , அலுவலங்களில் முகக்கவசம் கட்டாயம் இல்லை என்று kerry தெரிவித்துள்ளார். மேலும் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்க எந்த கட்டுப்பாடும் விதிக்க வில்லை என்றாலும், பொது மக்கள் கவனமாக இருக்க வேண்டும் என்றும் நியூ சவுத் வேல்ஸ் மாகாண சுகாதாரத்துறை வலியுறுத்தியுள்ளது.
Link Source: https://ab.co/3gIjs35