Breaking News

தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பெய்து வரும் நிலையில் இன்று, மூன்று மாவட்டங்களுக்கு வானிலை மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது.

The Met Office has issued a Red Alert for three districts in Tamil Nadu today.

வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் கடந்த மாதம் 25-ந்தேதி தொடங்கியது. நவம்பர் 1-ந்தேதியில் இருந்து பரவலாக எல்லா மாவட்டங்களிலும் கனமழை பெய்து வந்தது. கடந்த சனிக்கிழமை இரவு சென்னையில் அதி கனமழை பெய்தது. இதனால் சென்னை நகரமே வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.
பெரும்பாலான இடங்களில் வெள்ளம் வெளியேற்றப்பட்ட நிலையில், இன்னும் சில இடங்களில் வெள்ளம் சூழ்ந்த வண்ணம் உள்ளது. கடந்த மூன்று நாட்களாக தமிழக முதல்வர் சென்னையின் பல்வேறு பகுதிகளுக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.

The Met Office has issued a Red Alert for three districts in Tamil Nadu today..இதற்கிடையில் மாநிலத்தின் பல பகுதிகளில் அவப்போது லேசான மழை பெய்து கொண்டு இருக்கிறது. இன்றைய தினத்தில் இருந்து நாளை மறுதினம் வரை, அதாவது நவம்பர் 9-ந்தேதியில் இருந்து 11-ந்தேதி வரை ஒன்றிரண்டு மாவட்டங்களில் அதி கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. இந்த நிலையில், தமிழக வானிலை மைய அதிகாரி எஸ். பாலச்சந்திரன் புதுக்கோட்டை, ராமநாதபுரம், காரைக்கால் மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Link Source: https://bit.ly/3bZfbVI