Breaking News

ஆஸ்திரேலியாவில் மிகப்பெரிய டிரோன் கண்காட்சி ஜனவரியில் நடைபெறவுள்ளது.

The largest drone exhibition in Australia will take place in January.

2022-ல் மெல்போர்ன் நகரில் இந்த டிரோன் கண்காட்சி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவிலேயே மிகப்பெரிய டிரோன் கண்காட்சியாக இது அமையும்.

ஜனவரி 3-30 ஆம் தேதி வரை இந்த டிரோன் கண்காட்சிக்கு திட்டமிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு நாளும் 350 டிரோன்கள் மெல்போர்ன் வானில் வண்ண ஜாலமிட்டு, பார்வையாளர்களுக்கு காட்சி விருந்து படைக்கவுள்ளது. தினசரி 16 நிமிடங்கள் வரை இந்த டிரோன் காட்சி நடைபெறும்.

2020ல் எடின்பர்க் புத்தாண்டு கொண்டாட்டத்தில் டிரோன் சாகசாத்தை நிகழ்த்திக்காட்டிய சர்வதேச டிரொன் கலை அமைப்பு, மெல்போர்ன் டிரோன் கண்காட்சியை நடத்தவுள்ளதும் குறிப்பிடத்தக்கது. இந்த டிரோன் சாகசத்தை ஜனவரி 3 ஆம் தேதி முதல் தினசரி இரவு 9:30 மணிக்கு தொடங்கும் என்றும், இதனை இலவசமாக பார்வையிடலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Link Source: https://bit.ly/3Jh6uW6