Breaking News

பொதுத் தேர்தலில் 77 இடங்களை கைப்பற்றி பெரும்பான்மை பெரும் நிலையில் தொழிலாளர் கட்சியுள்ளது. இதன் மூலம் சபாநாயகர் தேர்வில் நீடிக்கும் இழுபறி முடிவுக்கு வரலாம் என்று தெரிகிறது.

Despite winning a majority of 76 seats in the general election, the Labor Party needs one more seat to elect a speaker in parliament.

நடந்து முடிந்த ஆஸ்திரேலியப் பொதுத் தேர்தலில் ஆண்டனி அல்பானிஸ் தலைமையிலான தொழிலாளர் கட்சி 75 இடங்களை கைப்பற்றி ஆட்சியை கைப்பற்றியது. ஆனால் ஆஸ்திரேலியாவில் ஆட்சியமைக்க பெரும்பான்மை இடங்கள் 76 தேவை. இரண்டு இடங்களில் தொழிலாளர் கட்சிக்கும் லிப்ரல் கூட்டணிக்கு இடையில் இழுபறி நீடித்து வந்தது.

இந்நிலையில் மேலும் ஒரு இடத்தில் வென்று 76 இடங்களை கைப்பற்றிவிட்டது தொழிலாளர் கட்சி. ஆனால் கில்மோர் தொகுதியில் தொழிலாளர் கட்சிக்கும் லிப்ரல் கூட்டணிக்கும் இடையில் இழுபறி நீடித்து வருகிறது. மக்களவையில் பெரும்பான்மை பெற்றுவிட்ட போதிலும், சபாநாயகரை தன்னாட்சி பலத்துடன் நியமிக்க தொழிலாளர் கட்சிக்கு மேலும் ஒரு இடம் தேவை.

ஒருவேளை அதில் பின்னடைவு ஏற்பட்டால், மக்களவையிலுள்ள அனைத்து உறுப்பினர்களும் முடிவு செய்யும் நபர் சபாநாயகராக அறிவிக்கப்படுவார். இதை தவிர்ப்பதற்கு கில்மோர் தொகுதியில் தொழிலாளர் கட்சி வெற்றி பெற வேண்டும். தொடர்ந்து நீடித்து வரும் இழுபறி காரணமாக ஆஸ்திரேலியாவில் பரபரப்பு நிலவி வருகிறது.