Breaking News

பாராளுமன்றத்தில் கேள்வி நேரத்தில் உறுப்பினர் பேசுகையில் அநாகரீகமாக சத்தம் எழுப்பிய விவகாரம் : செனட்டர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை

Independent உறுப்பினர் Jacqui Lambie  தனது கேள்வி நேரத்தின் போது பாராளுமன்றத்தில் பேசிக்கொண்டிருந்தபோது அநாகரிகமாக சத்தம் எழுப்பியதாக செனட்டர் மீது குற்றம் சாட்டப்பட்டது. அவருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்ட போதிலும் தொடர்ந்து அவர் அவ்வாறே நடவடிக்கையில் ஈடுபட்டதால் அவரை பாராளுமன்ற அவையில் இருந்து வெளியேற்றுமாறு உத்தரவிடப்பட்டது.

The issue of indecent exposure during Question Hour in Parliament. Demand for disciplinary action against senator.செனட்டரின் இதுபோன்ற செயல்பாடுகள் ஏற்றுக்கொள்ளத்தக்கது அல்ல என்றும, பாராளுமன்றத்தின் மாண்பை குலைக்கும் வகையில் அவர் செயல்பட்டதாகவும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. Greens செனட்டர் Sarah Hanson-Young மற்றும் Labor’s செனட்டர் Leader Penny Wong ஆகியோர் முன்னதாக சத்தம் கேட்பதாகவும் இது கேள்வி நேரத்தின்போது பேசு உறுப்பினர்களை கேலி கிண்டல் செய்யும் வகையில் அமைந்திருப்பதாகவும் கூறியுள்ளனர்.

பெண் உறுப்பினர் ஒருவர் பேசுகையில் இதுபோன்ற நடவடிக்கையில் ஈடுபடுவது கடும் கண்டனத்திற்கு உரியது என்றும் இனி பாராளுமன்ற செனட் சபையில் இது போன்ற விரும்பத்தகாத சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க வேண்டும் என்றும் Independent உறுப்பினர் Jacqui Lambie  கேட்டுக் கொண்டுள்ளார்.

Liberal செனட்டர் David Van பின்னர் இதுபோன்ற நடவடிக்கையில் ஈடுபட்டதற்காக மன்னிப்புக் கோரியதாகவும் இனி இதுபோன்ற செயல்கள் பாராளுமன்ற அவையில் நடைபெறாது என்று அவர் கூறியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் தன்னுடைய தனிநபர் குணநலன்கள் குறித்து குற்றச்சாட்டு கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் உறுப்பினர் பேசுகையில் தான் எழுப்பிய சட்டத்திற்காக செனட்டரிடம் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டுக்கொள்வதாகவும் அவர் கூறியுள்ளார்.

Link Source: https://bit.ly/3DeyXaY