Breaking News

பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியில் நெறியாளரின் கேள்வியை கண்டுகொள்ளாமல் தனது கருத்துக்களை மட்டுமே பிரதமர் ஸ்காட் மோரிசன் பேசிக்கொண்டிருந்த சம்பவம் பல்வேறு விவாதங்களை கிளப்பியுள்ளது.

The incident in which Prime Minister Scott Morrison was speaking only his views without seeing the moderator's question on the popular TV show has sparked various debates.

கடந்த செவ்வாய் அன்று பிரபல தொலைக்காட்சியில் புகழ்பெற்ற ‘ஏ கரெண்ட் ஆஃபெய்ர்ஸ்’ என்கிற நிகழ்ச்சியில் கானொளி காட்சி வாயிலாக பிரதமர் ஸ்காட் மோரிசன் பங்கேற்றார். நிகழ்ச்சியின் நெறியாளர் டிரேஸி கிரிம்ஷா, கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு, கொரோனாவால் ஏற்பட்டுள்ள மந்தநிலை, சாலமன் தீவுகளில் சீனாவின் ஆக்கிரமிப்பு உள்ளிட்ட ஆஸ்திரேலிய எதிர்கொள்ளும் பெரும் பிரச்னைகளை ஒரே கேள்வியாக முன்வைத்தார்.

அதற்கு பதிலளித்து சற்று தயங்கிய பிரதமர் ஸ்காட் மோரிசன், அனைத்து பிரச்னைகளையும் ஒரே வாக்கியமாக அமைத்து கேள்வியாக கேட்டுவிட்டீர்கள். இருந்தாலும் பதில் சொல்கிறேன். கொரோனா கொள்ளைநோய் பிரச்னையை மற்ற நாடுகளை காட்டிலும் ஆஸ்திரேலியா சிறப்பாக எதிர்கொண்டுள்ளது. இந்த நாட்டை காப்பாற்றுவதே எனது முதன்மை நோக்கம். அதற்காகவே லிப்ரல் கட்சி தொடர்ந்து உழைத்துக் கொண்டுள்ளது என்றார்.

மேலும் பேசிய அவர், கொரோனா பிரச்னைகள் தலைதூக்கிய போது எல்லைகளை அடைத்து மக்களை காத்தவன் நான் தான். பிப்ரவரி மாதமே இதற்கான நடவடிக்கைகளை இந்த அரசு எடுத்துவிட்டது. இதனால் தான் ஆஸ்திரேலியா பிழைத்தது. அதற்கு நம்முடைய கொள்கைகள் உதவின என்று பிரதமர் மோரிசன் கூறினார்.

நெறியாளரின் கேள்விக்காக முழு விளக்கங்களையும் கொடுக்காமல், நிகழ்ச்சியில் பிரதமர் மோரிசன் தேர்தல் பரப்புரையை மட்டுமே மேற்கொண்டு வருகிறார். அரசின் தன்னுடைய கடமையை செய்ததை, தன்னுடைய செயலாக அவர் சொந்தம் கொண்டாடுகிறார் என்று லேபர் எதிர்கட்சியினர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.