Breaking News

பிரான்ஸ் அருங்காட்சியகத்தில் இருந்த ஆப்ரிக்க புராதன பொருட்களை, ஒருவர் எடுத்து செல்ல முயன்ற சம்பவம் சர்வதேச அளவில் கவனம் ஈர்த்துள்ளது.

The incident in which a man tried to take away African antiquities from a museum in France has attracts international attention.

ஆப்ரிக்க கண்டத்தில் இருந்த பெரும்பாலான நாடுகளை காலனிகளாக மாற்றி, பிரான்ஸ் தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருந்தது. தவறான பொருளாதார கொள்கையாலும், சுரண்டலாலும், ஆப்ரிக்க நாடுகளில் இருந்த வளங்கள் பிரான்ஸ், இங்கிலாந்து போன்ற நாடுகளால் கொள்ளையடிக்கப்பட்டது.

அதுமட்டுமில்லாமல், ஆப்ரிக்க கலாச்சாரத்தை வெளிபடுத்தும், மிகப் பழமையான பொருட்களும் கொள்ளையடிக்கப்பட்டன. தற்போது இந்த பொருட்களை மீட்க வேண்டும் என்ற குரல் வலுத்து வருகிறது.

The incident in which a man tried to take away African antiquities from a museum in France has attracts international attention..
பாரீஸ் நகரில் உள்ள புகழ்மிக்க குவாய் பார்ன்லி அருங்காட்சியகத்தில் ஆப்ரிக்காவின் மிக பழமையான கலைபொருட்கள் காட்சிபடுத்தப்படுத்தப்பட்டுள்ள அந்த பகுதியில் நுழையும் Mwazulu Diyabanza, ஆப்ரிக்க பழங்குடியினர் இறுதி சடங்கின் போது பயன்படுத்திய மிக பழமையான பொருளை அந்த பீடத்தில் இருந்து எடுக்க முயற்சிக்கிறார்.

Mwazulu Diyabanza முயற்சியாக அந்த பொருளை எடுக்கும் அதே நேரத்தில் பாதுகாவலர்கள் அவரை சுற்றி வளைக்கிறார்கள். இந்த நிகழ்வுகள் அனைத்தையும் Mwazulu Diyabanza தன்னுடைய வலைத்தள பக்கத்தில் நேரலை செய்கிறார். இந்த நேரலையை ஆப்ரிக்க பூர்வக்குடிகளும், உலக முழுவதும் உள்ள ஆப்ரிக்க நாட்டினர் நேரலையாக பார்க்கின்றனர். தங்கள் ஆதரவையும் தெரிவிக்கின்றனர்.

The incident in which a man tried to take away African antiquities from a museum in France has attracts international attentionஇது குறித்து கருத்து தெரிவித்துள்ள Mwazulu Diyabanza, நாகரீகத்தின் தொட்டிலாக கருதப்படும், ஆப்ரிக்காவின் பொக்கிஷங்கள் பல்வேறு நாடுகளால் திருடப்பட்டதாக தெரிவித்துள்ளார். ஆப்ரிக்காவின் 95% பழங்கால பொருட்கள், ஐரோப்பிய நாடுகளில் உள்ளதாகவும் குறிப்பாக பிரான்ஸில் மட்டும் சுமார் 90 ஆயிரம் பழங்கால பொருட்கள் அருங்காட்சியகங்களில் இருப்பதாகவும் அவர் குறிப்பிடுகிறார்.

ஆப்ரிக்காவின் பொக்கிஷங்களை மீண்டும் தங்களிடமே ஒப்படைக்க வேண்டும் என்று வலியுறுத்தும் Mwazulu Diyabanza, அரசியல் தலைவர்களின் வாக்குறுதிகள் பெரும்பாலும் நிறைவேற்றப்படுவதில்லை என்றும் ஆதங்கம் தெரிவிக்கிறார். கடந்த வருடம் சுமார் 25 பழங்கால பொருட்களை ஆப்ரிக்காவிற்கு பிரான்ஸ் அனுப்பியுள்ளது. ஆனால் 90000 என்ற எண்ணிகையுடன் ஒப்பிட்டால் இது மிக சொற்ப்பான எண்ணிக்கை என்றும் ஆப்ரிக்கவினர் தெரிவிக்கின்றனர்.
இதே போன்ற கவனம் ஈர்க்கும் ஒரு யுக்தியை இவர், நெதர்லாந்து, போர்சுகல் போன்ற நாடுகளில் கையாண்டுள்ளார்.

The incident in which a man tried to take away African antiquities from a museum in France has attracts international attention...
சில தருணங்களில், காவலர்கள் இவரை சிறையில் அடைத்தும் நடவடிக்கை எடுத்துள்ளனர். நீதிமன்ற விசாரணையின் போது, தன்னுடைய நோக்கம் கொள்ளையடிப்பது கிடையாது என்று தெரிவிக்கும் அவர், சர்வதேச கவனத்தையும், நீதிமன்றத்தின் கவனத்தையும் தன் பக்கம் திருப்புவதே நோக்கம் என்று தெரிவித்துள்ளார்.

Mwazulu Diyabanza,யின் இந்த வித்தியாசமான முயற்சி ஒரு பக்கம் விமர்சனங்களை சந்தித்து வந்தாலும், சர்வதேச அரங்கில் கவனம் ஈர்க்க தொடங்கியுள்ளது. காலனி நாடுகளை, பிரான்ஸும், பிரிட்டனும், விடுவித்தாலும், அவர்களின் கலாச்சார பொக்கிஷங்களை விடுவிக்க வேண்டும் என்ற குரல் வலுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

Link Source: https://ab.co/3tvyKNk