Breaking News

தெற்கு ஆஸ்திரேலியாவில் கொரோனா தொற்று பாதிப்பு சற்று குறைந்து காணப்படுகிறது. அதனால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் குறைந்துள்ளது.

The incidence of corona infection is slightly lower in southern Australia. As a result, the death toll has dropped.

ஆஸ்திரேலியாவின் பல்வேறு பகுதிகளில் கொரோனா பாதிப்பு சற்று குறைந்து பதிவாகிறது. தெற்கு ஆஸ்திரேலியாவில் நேற்றைய ஒருநாள் பாதிப்பு 1,372-ஆக பதிவாகியுள்ளது. அதற்கு முந்தைய நாளில் 1,445 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

புதியதாக தொற்று பாதிக்கப்பட்ட 1,372 பேரில் 213 பேருக்கு உடனடியாக மருத்துவ சிகிச்சை தேவைப்படுகிறது. அதேபோல 17 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இதுவரை தெற்கு ஆஸ்திரேலியாவில் 14,016 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கோவிட்- 19 கிருமி தொற்றால் பாதிக்கப்பட்ட 90 வயது மூதாட்டி நேற்று சிகிச்சை பலனிக்காமல் உயிரிழந்தார். கொரோனா பாதிப்பு குறைந்து வருவது அமைதியை தருகிறது. தொடர்ந்து இதை கட்டுக்குள் கொண்டு வரும் நோக்கில் மாநில சுகாதாரத்துறை பாடுபடும் என தெற்கு ஆஸ்திரேலியாவின் முதல்வர் ஸ்டீவன் மார்ஷல் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

Link Source: https://ab.co/3BhyOUz