Breaking News

சிங்கப்பூரில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகளவில் பதிவாகி வருவது பொதுமக்களை வேதனை அடையச் செய்துள்ளது.

The high incidence of dengue fever in Singapore has caused distress to the public.

கடந்தாண்டை விட நடப்பாண்டு ஜூன் வாரத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு சிங்கப்பூரில் வேகம் எடுத்துள்ளது. இதன்மூலம் 2021 ஜூன் மாதத்தை விடவும் நடப்பாண்டு ஜூனிலை 285 சதவீதம் அதிகமாக பாதிப்பு எண்ணிக்கை பதிவாகியுள்ளது.

The high incidence of dengue fever in Singapore has caused distress to the publicதற்போது சிங்கப்பூரில் கோடை காலம் நிலவுகிறது. இதனால் பலருக்கும் எதிர்ப்பு சக்தி பெறுவதில் மந்த நிலை நீடிக்கிறது. இதன்காரணமாக டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது. இதற்கிடையில் பள்ளிகளில் டெங்கு பரவலை தடுக்கு விழிப்புணர்வு பணிகள் நடைபெற்று வருகின்றன. அதேபோன்று மக்கள் வசிப்பிடங்களில் அந்நாட்டின் சுகாதாரத்துறை அமைச்சகம் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

கடந்த 2011-ம் ஆண்டு கியூன்ஸ்லாந்து மாகாணத்தில் டெங்கு பாதிப்பு அதிகரித்த போது, அதை ஒழிப்பதற்கான வேலைகளில் ஆஸ்திரேலியா முனைப்புடன் களமிறங்கியது. அதற்காக கொசு பாதிப்பு அதிகமுள்ள பகுதிகளில் வோல்பாச்சியா நுண்ணுயிரியை பரவ விட்டது. இதன்மூலம் கொசுவின் இனப்பெருக்கம் தடை செய்யப்பட்டது.

இதன்காரணமாக டெங்குவை பரப்பும் ஏடஸ் கொசு அப்பகுதியில் ஒழிக்கப்பட்டது. தற்போது சிங்கப்பூர் அரசும் இதை பின்பற்ற முடிவு செய்துள்ளது.