Breaking News

விக்டோரியா மாகாணத்தில் கழிவுநீரில் கோவிட் வைரஸ்களுக்கான தடம் கண்டறியப்பட்டதால், அப்பகுதிவாசிகளை தொற்று பரிசோதனை செய்துக்கொள்ள சுகாதாரத்துறை வலியுறுத்தியுள்ளது.

The Department of Health has urged residents of Victoria to get tested for the virus as traces of covid viruses have been found in sewage.

ஆஸ்திரேலியாவில் உள்ள விக்டோரியாவில் கொரோனா நோய் தொற்று பரவலை தடுக்க பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

மேலும் மக்களிடம் கொரோனா தொற்ற பரவல் உள்ளதா என்பதை கண்காணிக்கவும் பல்வேறு வழிமுறைகளை கையாண்டு வருகிறது.

இதன் அங்கமாக விக்டோரியாவில் உள்ள பல்வேறு பகுதிகளில் ,கழிவு நீரில் கொரோனா வைரஸ்கள் உள்ளதா என்பதையும் சுகாதாரத்துறை கண்காணித்து வருக்கிறது.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நபர் குளிக்கும் போதோ, கழிவு நீரை வெளியேற்றும் போது தொற்று பாதித்துள்ளவரின் உடலில் உள்ள வைரஸ்கள் கழிவு நீரில் கலந்து வெளியேறுவதற்கு வாய்ப்புள்ளது.

அண்மையில் மேற்கு மெல்போர்ன் மற்றும் புறநகர் பகுதியில் கழிவு நீரில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் கொரோனா வைரஸ்களின் தடம் கண்டறியப்பட்டுள்ளது.

The Department of Health has urged residents of Victoria to get tested for the virus as traces of covid viruses have been found in sewageஇப்பகுதியில் இருக்கும் சுமார் 246 நபர்களை கொரோனா பரிசோதனை மேற்கொள்ள விக்டோரியா சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
இவர்கள் அனைவரும் பெர்த் பகுதியில் இருந்து திரும்பியவர்கள் என்றும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. அண்மையில் QF778 விமானத்தில் வந்த தொற்று பாதித்த ஒருவர் 14 நாட்களாக விக்டோரியாவில் இருந்துள்ளார். இதை கருத்தில் கொண்டே முன்னெச்சரிக்கை நடவடிக்கையை எடுத்துள்ளதாக விக்டோரியா சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
பரிசோதனைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ள 246 பேரில் 4 பேர் தொற்று பாதித்த நபருடன் ஒரே விமானத்தில் பயணம் செய்தவர்கள் என்றும், மற்ற 242 பேரும் பெர்த் பகுதியில் இருந்து விமானத்தில் வந்தவர்கள் என்றும் கண்டறியப்பட்டுள்ளது.

இவர்கள் அனைவருக்கும் ஏற்கனவே கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருந்தாலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மீண்டும் பரிசோதனை மேற்கொள்ள அறிவுறுத்தியுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 4123 நபர்களுக்குஅ விக்டோரியாவில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Link Source: https://ab.co/3e4HcNt