Breaking News

ஊரடங்குக்கு எதிரான, போராட்ட அறிவிப்பை தொடர்ந்து மெல்போரினில் காவலர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.

The guards in Melbourne are continuously accumulated against the anti-fight announcement.

மெல்போரினில் கட்டுமான பணியாளர்கள் இடையே அதிகரித்து வந்த கொரோனா தொற்று பரவலின் காரணமாக கட்டுமான பணியாளர்கள் தடுப்பூசி செய்துகொள்வது கட்டாயம் என்று அரசு அறிவித்தது.

கட்டுமான தொழிலாளர்கள் கட்டாயம் தடுப்பூசி என்ற உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த சங்கத்தின் உறுப்பினர்கள் ஏராளமானவர்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர் .

The guards in Melbourne are continuously accumulated against the anti-fight announcement,,அதேபோன்று ஊரடங்கு அறிவிப்புக்கு எதிராகவும் கடந்த சில நாட்களாக பல்வேறு அமைப்புகள் சிறிய அளவிலான போராட்டத்தை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில் ஊரடங்குக்கெதிராக போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ள போராட்டக்குழுவினர் கடந்த திங்கட்கிழமை முதல் சிறுசிறு போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பேரணியின்போது லேசான மோதல் ஏற்பட்டது அதே நேரத்தில் இந்த போராட்டத்தில் ஈடுபட்டதாக இதுவரை 200 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆங்காங்கே போராட்டங்கள் நடைபெற்று வந்தாலும் பெரிய பெரிய அளவிலான போராட்டங்கள் இதுவரை எதுவும் ஒருங்கிணைக்க படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

அதே நேரம் இன்று மாபெரும் பேரணி நடத்தப்படும் என்று ஊரடங்குக்கு எதிரான போராட்டக் குழு அறிவித்ததைத் தொடர்ந்து மெல்போரினில் உள்ள பல்வேறு முக்கிய இடங்களில் காவலர்கள் குவிக்கப்பட்டு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

The guards in Melbourne are continuously accumulated against the anti-fight announcementஇந்த போராட்டங்கள் குறித்து கருத்து தெரிவித்த ஆஸ்திரேலிய மருத்துவ சங்கத்தின் துணை தலைவர் Sarah Whitelaw ஊரடங்கு பிறப்பிக்கப்படுவது தொற்று பரவலை கட்டுப்படுத்தும் நோக்கத்தில் தான் என்றும் ,ஒருவருக்கு ஒருவர் உதவி தேவைப்படும் நேரத்தில் இதுபோன்ற போராட்டங்களில் ஈடுபடுவது தவறானது என்றும் குறிப்பிட்டிருக்கிறார். மேலும் இந்த போராட்டங்கள் மக்களைப் பிளவு படுத்துவதாக இருப்பதாகவும் குறிப்பாக சுகாதார பணியாளர்களை தாக்குவதும், மரியாதை குறைவாக நடத்துவது என்பது மிகவும் கண்னியம் குறைந்த செயல் என்றும் அவர் வேதனை தெரிவித்திருக்கிறார்.

போராட்டத்தில் ஈடுபட கூடிய பொதுமக்கள் தொற்று பரவலுக்கு வழி வகுப்பார்கள் என்றும் இதனுடைய விளைவுகள் இன்னும் ஒரு சில வாரங்களில் தெரியவரும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.

Link Source: https://ab.co/3u9FIYH