Breaking News

குயின்ஸ்லாந்து மாகாணத்தில் வரலாறு காணாத வகையில் ஒராண்டு காலத்துக்குள் இரண்டாவது முறையாக பெய்து வரும் கனமழை காரணமாக குடியிருப்புவாசிகளை பாதுகாப்பாக வெளியேற அரசு தரப்பில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

The government is taking steps to evacuate residents of Queensland due to the second heavy rain in a year.

நடப்பாண்டில் குயின்ஸ்லாந்து மாகாணத்தில் இரண்டாவது முறையாக கடும் மழைப் பொழிவு ஏற்பட்டுள்ளது. இதனால் ஜிம்பி பகுதியில் கடும் மழை வெள்ளம் ஏற்பட்டுள்ளது. அங்குள்ள மேரி ஆற்றில் நீர் அளவு அபாய கட்டத்தை எட்டிவிட்டது. அதனால் எந்நேரமும் அந்த பகுதியில் வெள்ளம் ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.

இதனால் மாநில முதல்வர் அனஸ்டாசியா பலாச்சூக் ஜிம்பி பகுதியில் வசிக்கும் குடியிருப்புவாசிகளை பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளார். இதையடுத்து ஜிம்பி பகுதி மேயர் கெல ஹாட்விக் பாதுகாப்பு பணிகளை முடுக்கிவிட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.