Breaking News

வெளிநாட்டு பயணிகள் ஏப்ரல் 30ஆம் தேதி முதல் நியூசிலாந்துக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என்று அரசு அறிவித்துள்ளது.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய கோவிட் நிர்வாகத்துறை அமைச்சர் Chris Hipkins, ஆஸ்திரேலியாவில் உள்ள நியூசிலாந்து வாசிகள் வரும் ஜனவரி 16 ஆம் தேதி முதல் நியூசிலாந்துக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும், அவர்கள் கட்டாயம் இரண்டு டோஸ் தடுப்பூசியும், புறப்படுவதற்கு 72 மணி நேரம் முன்பு எடுக்கப்பட்ட நெகட்டீவ் சான்றிதழ் அவசியம் என்றும் Chris Hipkins குறிப்பிட்டுள்ளார். நியூசிலாந்து திரும்பும் இவர்களுக்கு 14 நாட்கள் கட்டாய தனிமைப்படுத்துதல் இல்லை என்றாலும், 7 நாட்கள் சுய தனிமைப்படுத்துதல் அவசியம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அதே போன்று இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொண்ட வெளி நாட்டு பயணிகள் ஏப்ரல் 30 முதல் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் அமைச்சர் Chris Hipkins குறிப்பிட்டுள்ளார்.

The government has announced that foreign travelers will be allowed into New Zealand from April 30வெளிநாடுகளில் உள்ள நியூசிலாந்து வாசிகள் பிப்ரவரி 13 முதல் இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தியிருந்தால் நாடு திரும்பலாம் என்றும், அவர்களுக்கும் 7 நாட்கள் சுய தனிமைப்படுத்துதல் அவசியம் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். ஆனால் அதிக தொற்று பாதிப்பு உள்ள நாடுகளான இந்தியா, பிஜி, இந்தோனேசியா போன்ற நாடுகளில் இருந்து வருபவர்களுக்கு அனுமதியில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பட்டியலில் பாகிஸ்தான் இருந்தாலும், டிசம்பர் முதல் வாரத்தில் இந்த பட்டியலில் இருந்து நீக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆக்லாந்தில் கடந்த 3 மாதங்களாக விதிக்கப்பட்டு வந்த ஊரடங்கு விரைவில் நீக்கிகொள்ளப்படவுள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பிரதமர் ஜெசிந்தா , அடுத்தக்கட்ட கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து அரசு திட்டமிட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.

நியூசிலாந்தில் 89% பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 234 நபர்களுக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

Link Source: https://ab.co/3DVwO5c