Breaking News

காணாமல் போன 4 வயது சிறுமி கிளியோ ஸ்மித் கடத்தப்பட்டதாக கருதும் இடத்தில் தடயவியல் துறையினர் புலனாய்வு செய்து வருகின்றனர்.

The Forensic Department is investigating the whereabouts of missing 4-year-old girl Cleo Smith...

மேற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள பிளோஹோல்ஸ் பகுதியில் கடந்த அக்டோபர் 15 ஆம் தேதி பயணம் மேற்கொண்ட எல்லி ஸ்மித் – ஜேக் கிளிடன் தம்பதி தங்களுடைய இரு குழந்தைகளுடன் கூடாரம் அமைத்து தங்கியுள்ளனர்.

பிளோஹோல்ஸ், ஏராளமான மக்கள் இப்பகுதியில் கூடாரம் அமைத்து தங்கிச் செல்வது வழக்கம்.

The Forensic Department is investigating the whereabouts of missing 4-year-old girl Cleo Smith.இந்நிலையில் அக்டோபர் 16 ஆம் தேதி காலை கண் விழித்து பார்த்த போது, தங்களுடைய மூத்த மகள் 4 வயதே ஆன கிளியோ ஸ்மித்தை காணவில்லை என்றும், கூடாரத்தின் பற்பிணை (ஜிப்) திறக்கப்பட்டிருந்ததாகவும், அவர்கள் தெரிவித்துள்ளனர். 4 வயது சிறுமியான கிளியோ ஸ்மித்தின் உயரத்திற்கும் எட்டும் தூரத்தில் அந்த பற்பிணை இல்லை என்பதால், அந்த சிறுமியை யாரேனும் கடத்திச் சென்றிருக்கலாம் என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

சிறுமி காணாமல் போய் 11 நாட்களை கடந்த நிலையில், கிளியோ ஸ்மித் குறித்து எந்த விதமான தகவலும் இன்னும் காவல்துறைக்கு கிடைக்கவில்லை என்று கருதப்படுகிறது.

The Forensic Department is investigating the whereabouts of missing 4-year-old girl Cleo Smith..இந்நிலையில் சிறுமி காணாமல் போனதாக கருதப்படும் பிளோஹோல்ஸ் பகுதியில் தடயவியல் துறை நிபுணர்கள் சோதனை மேற்கொண்டனர். இந்த புலன்விசாரணைக்கு புலனாய்வு கண்காணிப்பாளர் Rod Wilde தலைமை தாங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.100 க்கும் அதிகமான காவல்துறையினர் காணாமல் போன சிறுமியை கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள காவல்துறை ஆணையர் Col Blanch சிறுமியை தேடும் முயற்சி தீவிரமாக நடைபெற்று வருவதாகவும், அந்த முகாமில் இருந்து அதிகாலை 3 மணிக்கு கடற்கரை பகுதியை நோக்கி சென்றவர்கள் வாகனம் குறித்த விவரம் தெரிந்தால் மக்கள் தகவல் தெரிவிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது

The Forensic Department is investigating the whereabouts of missing 4-year-old girl Cleo Smith,மேலும், பிளோஹோல் பகுதியில் குறிப்பிட்ட நேரத்தில் பதிவான சிசிடிவி காட்சிகளை இன்னும் பெருமாலான மக்கள் ஒப்படைக்கவில்லை என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிளோஹோல் பகுதியில் குறிப்பிட்ட நேரத்தில் கார்களில் பயணம் செய்தவர்கள், அவர்களின் கேமரா காட்சிகளை காவல்துறையிடம் ஒப்படைக்கவும் வலியுறுத்தியுள்ளது. மேலும் காணாமல் போன 4 வயது குழந்தையை மீட்க பெடரல் காவல்துறையும், மேற்கு ஆஸ்திரேலிய காவலர்களும் ஒன்றிணைந்து பணியாற்றி வருகின்றனர்.

சிறுமி காணாமல் போன விவகாரம் குறித்து ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்திலும் விவாதிக்கப்பட்டது. அப்போது காணாமல் போன சிறுமியை மீட்கும் நடவடிக்கைகளில் காவல்துறை தீவிரமாக ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டது.

Link Source: shorturl.at/kBN56