Breaking News

இந்தியாவில் சிக்கியுள்ள ஆஸ்திரேலியர்களை தாயகம் அழைத்துவருவதற்கான முதல் மீட்பு விமானம் ஆஸ்திரேலியா வந்தடைந்தது.

The first rescue plane to bring home Australians stranded in India has arrived in Australia.

இரண்டாம் அலை அதிகரிப்பால் இந்தியாவில் இருந்து ஆஸ்திரேலியா வருவதற்கு ஸ்காட் மோரிசன் அரசு தடை விதித்துள்ளது. இந்த தடையின் காரணமாக இந்தியாவில் உள்ள ஆஸ்திரேலியர்கள் தாயகம் திரும்புவத்தில் கடும் சிக்கல் ஏற்பட்டது. சுமார் 9000 ஆஸ்திரேலியர்கள் இந்தியாவில் உள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்தது.

The first rescue plane to bring home Australians stranded in India has arrived in Australia..இந்நிலையில் இந்தியாவில் சிக்கியுள்ள ஆஸ்திரேலியர்களை தாயகம் அழைத்தது வருவதற்கு சிறப்பு விமானம் மே 15 ஆம் தேதி முதல் இயக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது. அதன்படி இயக்கப்பட்ட சிறப்பு மீட்பு விமானம் இந்தியாவில் இருந்து ஆஸ்திரேலிய ராயல் விமானப்படை தளத்தை வந்தடைந்தது.

இந்த விமானத்தில் சுமார் 80 பேர் அழைத்து வரப்பட்டதாக்க கூறப்படுகிறது.

150 பேரை அழைத்து வர அனுமதியிருந்தாலும், பரிசோதனையில் 40 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டத்தாலும், சுமார் 30 பேர் தோற்றுடையவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்ததாலும் அவர்கள் அழைத்துவரப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குவாண்டஸ் விமானத்தில் அழைத்துவரப்பட்ட அனைவரும் ஹோவர்ட் ஸ்பிரிங் தனிமைபடுத்தும் மையத்துக்கு அழைத்து செல்லப்படுவார்கள்.

The first rescue plane to bring home Australians stranded in India has arrived in Australiaஇன்னும் 8 நாட்களுக்கு பிறகு இரண்டாம் மீட்பு விமானம் இயக்கப்படும் என்றும், அந்த விமானத்தில் அழைத்து வரும் ஆஸ்திரேலியர்களுக்கு இரண்டு பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல் பரிசோதனை ஆர்.டி.பி.சி.ஆர் சோதனை என்றும், இரண்டாவதாக ஆண்டி ஜென் பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு பரிசோதனைகளிலும் தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டால் மட்டுமே அவர்கள் விமானத்தில் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் சுமார் 4 லட்சம் பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. மேலும் 4 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை சுமார் 2.5 லைட்சத்திற்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர். இந்த எண்ணிக்கை குறைத்து காண்பிக்கப்படுவதாக சில விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.

Link Source: https://ab.co/2QkS5BH