Breaking News

கொரோனா தொற்று பாதிப்புக்குப் பின்னர் இங்கிலாந்து இரண்டாம் எலிசபெத் ராணியின் முதல் சந்திப்பு : காமன்வெல்த் நிகழ்விலும் பங்கேற்காத நிலையில் கனடாவின் புதிய கவர்னர் ஜெனரலுக்கு தேநீர் விருந்து அளித்தார்

The first meeting of Queen Elizabeth II of the United Kingdom after the corona epidemic. a tea party for the new Governor-General of Canada, who did not attend the Commonwealth event.

இங்கிலாந்து இரண்டாம் எலிசபெத் ராணி கொரோனா தொற்று காரணமாக அரண்மனையில் தனிமைப்படுத்தப்பட்ட சிகிச்சை பெற்று வந்தார். வயது மூப்பு காரணமாக சந்திப்புகள் ரத்து செய்யப்பட்ட அவர் பங்கேற்பதாக இருந்து அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டன. மேலும் காமன்வெல்த் வருடாந்திர நினைவு ஆராதனை உள்ளிட்ட முக்கிய நிகழ்வுகளில் காணொலி வாயிலாக பங்கேற்று வந்தார்.

இந்நிலையில், தொற்று பாதிப்பிலிருந்து மீண்டு முதல் சந்திப்பாக கனடாவின் புதிய கவர்னர் ஜெனரலாக பொறுப்பேற்றுள்ள Mary Simon க்கு அரண்மனையில் சந்தித்தார்.

விண்ட்சர் மாளிகையிலுள்ள Oak Room என்னும் பிரபலமான அறையில், அவர் கனடாவின் புதிய கவர்னர் ஜெனரலாக பொறுப்பேற்றுள்ள Mary Simon மற்றும் அவரது கணவரான Whit Fraser இருவருக்கும் தேநீர் விருந்து அளித்துள்ளார்.

The first meeting of Queen Elizabeth II of the United Kingdom after the corona epidemic a tea party for the new Governor-General of Canada, who did not attend the Commonwealth event..இதனை அடுத்து திட்டமிட்டபடி மற்ற நிகழ்வுகளில் ராணி பங்கேற்பார் என்றும், மக்கள் கூடும் நிகழ்வுகளுக்கு அவர் வருவார் என்றும் அரண்மனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்து ராணி கொரோனா தொற்றிலிருந்து விடுபட்டதும், அவர் நேருக்கு நேர் சந்தித்த முதல் உலகத் தலைவர், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ. அதற்குப் பிறகு ராணி நேருக்கு நேராக சந்தித்தது Mary Simon-ஐத்தான்.

தனது தந்தை கனடா பிரதமராக இருந்ததால், ஒரு சிறுவனாக இருந்தபோதே அடிக்கடி பிரித்தானிய மகாராணியாரை சந்திக்கும் வாய்ப்பைப் பெற்றவர் ஜஸ்டின் ட்ரூடோ என்பது குறிப்பிடத்தக்கது.

கோவிட் தொற்று பாதிப்புக்கு பின்னர் ராணி பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளதாகவும், அவர் தற்போது உடல் நிலை சீராக இருப்பதாகவும் பக்கிங்ஹாம் அரண்மனை நிர்வாகம் அறிவித்துள்ளது. மருத்துவர்களின் அறிவுரைப்படி அவர் தொடர்ந்து மற்ற நிகழ்வுகளில் பங்கேற்க உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

Link Source: https://ab.co/3MX1RlS