Breaking News

ஆஸ்திரேலியாவில் பிப்ரவரி 22ம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி போடப்படும் !

ஆஸ்திரேலியாவில், பிப்ரவரி 22ம் தேதி அன்று கொரோனா வைரஸ் தடுப்பூசி போடப்படும் என்று Health Minister Greg Hunt கூறினார்.

Health Minister Greg Hunt“The eagle has landed” என்று செய்தியாளர்களிடம் கூறிய Health Minister Greg Hunt முதல் Pfizer டோஸ் சிட்னிக்கு வந்த பின், 142,000க்கும் மேற்பட்ட அளவுகள் பாதுகாக்கப்பட்ட இடத்திற்கு கொண்டு செல்லப்படும். பின்னர் வரும் நாட்களில் சேதம் மற்றும் தரம் ஆகியவற்றை கவனத்தில் கொண்டு எந்தெந்த பகுதிகளில் தடுப்பூசி போடப்படும் என்பது பின்னர் அறிவிக்கப்படும்.

இன்று ஒரு முக்கியமான நாள். ஆஸ்திரேலியர்களை பாதுகாப்பதற்காக ஒரு கவனமான திட்டத்தின் அடுத்த கட்டமாகும். ஹோட்டலில் தனிமைப்படுத்தப்பட்ட ஊழியர்கள், முன்னணி சுகாதார ஊழியர்கள், வயதானவர்கள் போன்றவர்களுக்கு தடுப்பூசி போடுவதற்கு 50,000 அளவுகள் மாநிலங்களுக்கு வழங்கப்படும். வயதானவர்களின் பராமரிப்பு வசதிக்காக 30,000 அளவுகளும், பிப்ரவரி மாத இறுதிக்குள் 60,000 அளவுகளும் வழங்கப்படும் என்றார்.

மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தவும், தடுப்பூசியின் தரத்தை உறுதிபடுத்தவும், Pfizer தடுப்பூசி அளவை பிரதமர் Scott Morrison முதலில் பெறுவார். 21 நாள் இடைவெளியில் இரண்டாம் தடுப்பூசி போட வேண்டும். உள்நாட்டிலும் AstraZeneca தடுப்பூசி உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த தடுப்பூசி Therapeutic Goods Administration அனுமதிக்காக காத்திருக்கிறோம்.

கடந்த ஆண்டு பிற்பகுதியில் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் உள்ளூர் தடுப்பூசி, விக்டோரியாவில் உள்ள biotechnology company CSL’s ல் உற்பத்தி தொடங்கியது. AstraZenecaஐ ஒரு முறை செலுத்தப்போவதாகவும், மக்களுக்கு மருந்து பாதுகாப்பானதாகவும், பயனுள்ளதாகவும் இருக்கும் என்ற மருத்துவ கட்டுப்பாட்டாளரின் மீது மக்கள் நம்பிக்கை வைக்கவேண்டும். மேலும் இது சுதந்திர நாடு. யார் வேண்டுமானாலும் வித்தியாசமான முடிவுகள் எடுக்க முடியும். இந்த நம்பிக்கை உயர்வுக்கும், பாதுகாப்பிற்கும், அதிக சுதந்திரத்துக்கும் வழிவகுக்கும் என்றார்.